தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது! தமிழீழம் மட்டுமே தீர்வு! லீ க்வான் யூ!

செட்டிக்குளம் வாவியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 05:35.38 AM GMT ]
மன்னார் மாவட்டத்திலுள்ள சிலாவத்துறை, செட்டிக்குளம் வாவியில் நீராடிகொண்டிருந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
13 வயதான புஷ்பகுமாரி இனோகா என்ற சிறுமியும் 8 வயதான ரொஷான் பர்னாந்து என்ற சிறுவனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்விருவரும் அரிப்பு மேற்கு பகுதியிலுள்ள 100 வேலைத்திட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo3.html
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய தலைமை?
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 06:00.47 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புதிய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கவுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்து, புதிய தலைமைத்துவத்தின் கீழ் இயங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் தேர்தல்களில் போட்டியிட வேண்டியுள்ளது.
இதனை தவிர்க்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு சுரேஸ் பிரேமசந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo4.html
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல உதவி
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 06:14.52 AM GMT ]
மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல ஏனையவர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பார்வையற்றவர்கள் உள்ளிட்ட விசேட தேவைகளை உடையவர்களை ஏனைய ஒருவர் வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்குகின்றேன்.
விசேட தேவையுடையவர்கள் ஏனைய ஒருவரின் உதவியைப்பெற்றுக் கொள்வது தொடர்பில் விசேட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
ஒருவரின் உதவியுடன் வாக்குச் சாவடிக்கு செல்ல விரும்பும் விசேட தேவைகளை உடையவர்கள் கிராம உத்தியோகத்தரின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும்.
அந்த விண்ணப்பத்தை அரசாங்க வைத்திய அதிகாரியொருவர் உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லும் நபர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
விசேட தேவை உடையவரும் அவரை அழைத்துச் செல்பவரும் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo5.html
தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது! தமிழீழம் மட்டுமே தீர்வு! லீ க்வான் யூ
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 06:32.05 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்று சிங்கப்பூரின் சிற்பி என்றழைக்கப்படும் லீ க்வான் யூ வலியுறுத்தியுள்ளார்.
பேராசிரியர் Thomas Gordon என்பவர் Conversations With Lee Kuan Yew எனும் நூல் ஒன்றை 2010 இல் எழுதியுள்ளார். இதில் லீ க்வான் யூ வின் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன. இதன் போது ஈழப் பிரச்சினை தொடர்பாக லீ க்வான் யூ வின் கருத்து வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிங்களவர்கள் மட்டுமன்றி, தமிழர்களும் ஆதி காலம் தொட்டே வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் இரு இனத்தவரும் ஒற்றுமையாக வாழும் சூழல் அங்கில்லை. தவிரவும் இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை அங்கு அமைதி நிலவாது.
விடுதலைப் புலிகளை ஒழித்தது நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதாக ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.
ஆனால் சிங்களவர்களால் ஒருபோதும் தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது. தமிழர்கள் அச்சத்தில் ஓடி ஒளியவும் மாட்டார்கள். மறுபுறத்தில் அவர்களின் மனதை வென்றெடுப்பது அரசாங்கத்தினால் முடியாத காரியம்.
சிங்களவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்பட்டமான இன அழிப்பு நடைபெறுகின்றது. ஆனால் தமிழர்கள் தொடர்ச்சியாக அடங்கியிருக்க மாட்டார்கள். இந்தச் சூழலில் இன்னொரு ஆயுதப் போராட்டம் குறித்து உடனடியாக எதிர்வு கூறமுடியாது.
எனினும் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம் மட்டுமே. அதன் மூலமாக இரு இனங்களும் கௌரவமான வாழும் சூழல் ஏற்படுத்தப்படும் என்றும் லீ க்வான் யூ 2010 இல் தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதுடன், இவர் எழுதிய புத்தகம் மின்னிதழ் (ebook) வடிவில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo6.html

Geen opmerkingen:

Een reactie posten