ஓராண்டுக்கு முன்னர் ஈராக்கிய கப்பல் ஒன்றில் மீட்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னதாக 41 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நிர்க்கதியான நிலையில் இருந்த போது ஈராக்கிய கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் எந்த நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுலா வீசா மூலம் இந்தியா சென்று அங்கிருந்து குறித்த 41 பேரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளனர்.
இந்தப் படகில் பயணித்தவர்களுக்கு என்ன நேர்ந்தது அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பது பற்றிய எந்ததகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை.
சிங்கள மற்றும் தமிழர்கள் இந்தப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழாம் அங்கம் வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo7.html
Geen opmerkingen:
Een reactie posten