[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 03:27.28 PM GMT ]
மருத்துவ தேவைகள் உட்பட ஏனைய பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பனை வெல்லத்தினை நுகர்வோர், குறித்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதே வேளை சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் இவ்வுரப் பாவனை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவரும் நிலையில் இவ்வழக்கின் தீர்ப்புத் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி ஊர்காவற்றுறை பனை, தென்னை வளக்கூட்டுத் தாபனத்தின் பனை வெல்ல உற்பத்தி நிலையத்தில், மனித பாவனைக்கு உதவாத உரம் கலக்கப்பட்டு பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொதுச் சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பனை வெல்ல உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 125 கிலோ கிராம் பொஸ்பேற் உரத்தினையும், அவ்வுரத்தினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட 114 கிலோ கிராம் பனை வெல்லத்தினையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியிருந்தார்.
வழக்கு விசாரணைகளின்போது சங்கத்தின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி குறித்த செயற்பாடு தொடர்பில் விளக்கமளிக்க செப்டம்பர் முதலாம் திகதி கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்நிலையில் நாளை வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq6.html
நல்லூர் பிரதேச சபை பகுதிகளில் கழிவு அகற்றும் நடவடிக்கையில் படையினர்!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 03:51.48 PM GMT ]
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் பிரதேச சபையினர் நாவற்குழி பகுதியில் யாழ்.மாவட்டத்தின் நுழைவாயிலுக்கு அண்மையில் பிரதேச சபையின் கழிவுகளை கொட்டுவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தனர். ஆனால் அவ்வாறு கழிவுகளை கொட்டுவதற்காக பிரதேச சபை தெரிவு செய்திருக்கும் காணி தனியார் ஒருவருக்குச் சொந்தமான நெற்செய்கை காணியாகும்.
மேலும் நாவற்குழி யாழ்.வரவு பகுதியில் குடாநாட்டின் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாக்கும் நன்னீர் தேக்கப்படும் இடமாக மிக நீண்டகாலம் இருந்து வருகின்றது.
எனவே இந்த இடத்தில் பிரதேச சபையினர் குப்பைகளை கொட்டினால் ஒன்று நெற்செய்கை நிலத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது? என்ற இலங்கையின் சட்டத்தின் படி சட்டமீறலாகும்.
இரண்டாவது நன்னீர் தேங்கும் பகுதியில் கழிவு கொட்டப்பட்டால் நீர் மாசுபடும் பிரச்சினையும் உருவாகும்.
எனவே இதனை உதாரணம் காட்டி மாகாண விவசாயம் மற்றும் கமநல சேவைகள் அமைச்சு நல்லூர் பிரதேச சபைக்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றிணை அனுப்பியிருந்தது.
ஆனால் நிலைமையினை விளங்கிக் கொள்ளாமல் மறுபக்கம் குறித்த கழிவு அகற்றுவதற்கான, இடத்திற்குச் செல்லும் பாதை அமைப்பில் பெருமளவு முறைகேடுகளை செய்திருக்கும் நல்லூர் பிரதேச சபையினர் வடமாகாணசபை விவசாய அமைச்சும், வடமாகாண சபையினரும் தமது திட்டத்திற்கு எதிராக இருப்பதாக கூறி வடமாகாண சபைக்கு எதிராக கடந்த சில தினங்களாக கழிவு அகற்றும் செயற்றிட்டத்தை முற்றாக நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
இதனால் திருநெல்வேலி உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவு கழிவுகள் தேங்கிக் காணப்படுகின்றது. இதனையடுத்து இதுதான் தாமதம் என இராணுவத்தினர் தாங்கள் கழிவுகளை அகற்றுவதாக கூறிக்கொண்டு இன்றைய தினம் முதல் கழிவுகளை அகற்ற ஆரம்பித்திருக்கின்றனர்.
இதற்கு முன்பாதாக இராணுவத்தினர் நல்லூர் பிரதேச சபையுடன் தொடர்புகொண்டு, தாங்கள் குப்பை அள்ளப் போவதாகவும், அதற்கான வாகனங்களை தமக்கு தருமாறும் கேட்டிருக்கின்றனர்.
அதற்கு பிரதேச சபை தலைவர் ஒத்துக் கொண்டு வாகனங்களையும், சாரதியையும் தருவதாக கூறியதாக இன்றைய தினம் மாலை இராணுவம் ஊடகங்களுக்கு தெரிவித்தது. அதன் பின்னர் ஊடகங்கள் பிரதேச சபை தலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறில்லை. என தெரிவித்தார்.
பின்னர் ஊடகவியலாளர்கள் சிலர் நல்லூர் பிரதேச சபை கழிவு அகற்றும் வாகன சாரதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது. இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இராணுவம் கழிவு அகற்றுவதாகவும், அவர்களுக்கு வாகனங்களை ஓட்ட சாரதிகள் தேவை எனவும் கூறி தம்மை வேலைக்கு அழைத்ததாகவும் பின்னர் வேலை இல்லை என தம்மை மீண்டும் வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறினர்.
அதன் பின்னர் இராணுவத்தினரிடம் சென்று கேட்ட போது. நல்லூர் பிரதேச சபை தலைவர் முன்னர் வாகனம் தருவதாக கூறினார். ஆனால் பின்னர் சாரதிகள் இல்லை. எனவே வாகனங்களை இப்போது தரமுடியாது. என கூறிவிட்டார். என இராணுவம் கூறியது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq7.html
Geen opmerkingen:
Een reactie posten