தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

மோடியின் ஆலோசனை இலங்கையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன?



குளத்தில் மூழ்கி மூன்று மாணவிகள் உயிரிழப்பு!- கிளிநொச்சியில் துயரச் சம்பவம்!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 01:41.10 PM GMT ]
கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குளத்தில் குளிப்பதற்காக நான்கு பெண்கள் சென்றதுடன் அதில் மூவர் உயிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இதுவரை காணவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இந்த வருடம் எதிர்கொள்ளவுள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த பா.தாட்சாயினி (வயது 17) அவரது சகோதரியான பா.நவதாரணி (வயது 11), விநாயகபுரத்தைச் சேர்ந்த இ.நிசாந்தினி (வயது 19) ஆகியோரே குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நிலவி வரும் வரட்சியினால் குறித்த மாணவிகளின் வீட்டில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையிலேயே குறித்த நால்வரும் குளத்தில் குளிக்க சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
2ம் இணைப்பு
கிளிநொச்சி கந்தன் குளம் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் உட்பட மூன்று மாணவிகளின் உயிரை பறித்தது.
கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த மூன்று மாணவிகள் இன்று அருகில் உள்ள கந்தன் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலசரவணபவன் நவதாரணி, பாலசரவணபவன் தாட்சாயிணி ஆகியவர்களும் இரத்தினராசா நிசாந்தினி என்பவரும் பரிதாபகரமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
இவர்கள் மூவரும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களென தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வரட்சி காரணமாக வற்றி சேறாக காணப்படும் குளங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான நிலைகளில் குளித்து வருகின்றார்கள்.
கிளிநொச்சியில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் வரட்சியும் நீர் பற்றாக்குறையுமே குளங்கள் நோக்கி மக்களை செல்ல வைத்திருக்கின்றது.
குளங்களும் வற்றி ஆபத்தான நிலையில் காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த இளம்பிஞ்சுகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv6.html
ஆளும் கட்சியின் வேட்பாளர்களுக்கு சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் யார் என்பது தெரியாது: டியூ. குணசேகர
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 02:12.52 PM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் யார் என்பதை அறியாதிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் டி.யூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் படித்த புத்திசாலிகள் எனக் கூறிக்கொள்பவர்களும், முன்னாள் அமைச்சர்களும் இதில் அடங்குகின்றனர்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களுக்கு நேர்முகப் பரீட்சையை நடத்தும் போது இந்த விடயத்தை தாம் அறிந்து கொண்டதாகவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv7.html
ஜனாதிபதி என்பதால் நோய்கள் ஏற்படாதா?: கெஹெலிய சீற்றம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 02:27.53 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிகிச்சை பெறுவதற்காகவே அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதா?  அவர் மருந்துகளை எடுக்க முடியாதா? சுகவீனம் ஏற்பட்டால் மருந்தெடுப்பதையும் ஊடகங்களுக்கு  சொல்ல வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியும் சாதாரண மனிதர்தான். அவருக்கு காய்ச்சல், தடிமன் ஏற்படாதா? சுகவீனம் என்பது ஜனாதிபதி என்றில்லை. எல்லோருக்கும் ஏற்படும் எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு திடீர் சுகவீனம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவசரமாக அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmwy.html
முடிவுக்கு வரும் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 02:51.21 PM GMT ]
இலங்கையில் மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நாளை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
நாளை காலை 8 மணியுடன் தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று மாலை அறிவித்துள்ளனர்.
சம்பள உயர்வு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணியாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைப் பெற்றவர்களும் நாளாந்த சிகிச்சைகளுக்கு வரவோரும் பாரிய சிரமங்களுக்கு உள்ளாகினர்.
இநநிலையில் நோயாளி ஒருவரின் மனுவின் அடிப்படையில் பணிப்புறக்கணிப்புக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையை விதித்தது. எனினும் தடையை மீறி இன்றும் போராட்டம் நடைபெற்றது.
எனினும் இன்று மாலை வெளியிடப்பட்ட தொழிற்சங்க அறிவித்தல் ஒன்றின்படி, தமது கோரிக்கைகள் சிலவற்றுக்கு உரிய பதில் வழங்கப்பட்டுள்ளமையால் நாளை காலையில் பணிப்புறக்கணிப்பை நிறுத்திக்கொள்வதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmw0.html
மோடியின் ஆலோசனை இலங்கையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன?
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 03:29.45 PM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனை காரணமாக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவிக்கிறது.
நாடாளுமன்றக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றால் மாத்திரமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் கூறிவந்தது.
எனினும் தற்போது கூட்டமைப்பின் நடவடிக்கைகளே முன்னர் தம்முடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முறிவதற்கான காரணம் என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அத்துடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரினால் அதனுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளமையை இந்திய இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது அரசாங்கத்தின் கடும் போக்கில் ஒரு மாற்றம் என்று இந்திய இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்காக தமது சாதகமான பதிலை வெளியிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் யாவும், இந்தியப் பிரதமர், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியமையை அடுத்தே ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்குமாறு தம்முடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி ஆலாசனை வழங்கியதாக இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாவதற்கான சாதக நிலைகள் உருவாகி இருக்கின்றன.
எனினும் இந்த பேச்சுவார்த்தை காரணமாக சிங்கள வாக்காளர்களின் வாக்குகள் தமக்கு கிடைக்காது போவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்று கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmw1.html

Geen opmerkingen:

Een reactie posten