தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

அமெரிக்க "ஹைப்பர் சோனிக்" ஆயுதம் பரம ரகசியம் வெளியானது !

அமெரிக்கா ஓசைபடாமல் சில கலமாக தயாரித்து வந்த ஆயுதமே "ஹைப்பர் சோனிக்" ஆகும். உலகில் எந்த ஒரு மூலைக்கும் அது 1 மணி நேரத்தில் சென்று தாக்குதல் நடத்தும் திறண் கொண்டது. சொல்லப்போனால் சீனாவில் இருந்து அமெரிக்காவை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்டால், உடனே தன்னிச்சையாக அது செயல்பட்டு தனது நாட்டை காப்பாற்ற இந்த "ஹைப்பர் சோனிக் ஆயுதம்" புறப்படும். மிகையொலி வேகத்தில் செல்லக்கூடிய இந்த ராக்கெட் போன்ற ஏவுகணை, பல அதி நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டது. தன்னை உருமறைப்பு செய்வது, ராடர் திரையில் மறைவது, தனக்கு ஏற்படும் ஆபத்துகளை தாமாகவே கணித்து தவிர்த்து கொண்டு முன்னேறுவது, என்று இதில் பல அம்சங்கள் உள்ளது. ஒட்டு மொத்தத்தில் அமெரிக்காவை ஒரு ஏவுகணையோ இல்லை போர் விமானமோ தாக்க முற்பட்டால் இந்த ஆயுதம் தானே பறந்து சென்று தாக்குதல் நடத்தி எதிரியின் ஆயுதத்தை வீழ்த்தும்.
அதனை விட இதில் உள்ள விசேட அம்சம் என்னவென்றால் இது கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று கூட துல்லியமாக தாக்க வல்லது. அனைத்தையும் இவ்வாறு இரகசியமாக செய்த அமெரிக்கா அதனை சில நாடிகளுக்கு முன்னர் அலாஸ்காவில் உள்ள ஏவுகணை தளம் ஒன்றில் வைத்து ஏவி பரீட்சித்துப் பார்க முனைந்தவேளை, சற்றும் எதிர்பார்காத வாறு அது ஏவப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியுள்ளது. இது எவ்வாறு நடந்தது என்று அதனை தயாரித்த விஞ்ஞானிகள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டு உள்ளார்கள். குறித்த ஆயுதம் ஏவுகணை தளத்தில் வைத்தே வெடித்ததால், அத்தளத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் அறியப்படுகிறது.
ஒலியின் வேகத்தை விட அதிகமாக பயணம் செய்யும் விமானங்களை நாம் " சூப்பர் சோனிக்" என்று கூறுகிறோம். இதனை விட இரட்டை வேகத்தில் செல்லும் விமானங்களை "ஹைப்பர் சோனிக்" என்று அழைக்கிறோம். மேலும் ஹைப்பர் சோனிக்கை விட வேகமாக செல்லக்கூடிய(இதுவரை உலகில் கண்டு பிடிக்கப்படவில்லை) விமானங்களை "மீசோ சோனிக்" என்று அழைப்பார்கள். ஆனால் மீசோ சோனிக் வேகத்தில் செல்லும் எதனையும் இதுவரை எவரும் கண்டு பிடிக்கவில்லை. நடந்த விபத்தால் அமெரிக்கா பாதுகாப்பு நிறுவனமான பெண்டகன் பெரும் குழப்பத்தில் உள்ளது. இது அமெரிக்காவுக்கு ஒரு பாரிய பின்னடைவு என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/878.html

Geen opmerkingen:

Een reactie posten