[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 06:58.30 AM GMT ]
வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த படைச்சிப்பாய் ஒருவர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ். குருநகர் தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றினுள் நேற்று நள்ளிரவு படைச்சிப்பாய் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.
குறித்த படைச்சிப்பாயைக் கண்ட வீட்டார் சத்தமிட்டு கத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு, அவரை மடக்கிப்பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் யாழ். பொலிஸாரிடம் குறித்த படைச்சிப்பாயை ஒப்படைத்துள்ளனர். அவ்வீட்டில் பெண்கள் தனியாக இருந்ததை அறிந்து குறித்த படைச்சிப்பாய் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சிப்பாய் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகைக்யில் இருந்து விழுந்த விமானப்படை வீரர் பலி
சீனக்குடா விமானப்படை முகாமில் பயிற்சி பெற்று வந்த விமானப்படை வீரர் ஒருவர் உறங்கிய கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கட்டிலில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட படுகாயம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு படுக்கைகளை கொண்ட அடுக்கு கட்டிலில் இருந்தே இந்த விமானப்படை வீரர் கீழே விழுந்துள்ளார்.
காலி ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான டி.ஜீ.ஐ.விதுரங்க என்ற விமானப்படை வீரரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் வின்கமாண்டர் பத்மன் டி கொஸ்தா தெரிவித்தார்.
இந்த மரண சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடைபெறவிருந்தது.
மனைவியை கத்தியால் வெட்டிய நபர் கைது
குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திய 31 வயதான நபரை தாம் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி - வன்னி முந்தல் பிரதேசத்தை சேர்ந்த முகமது நெய்னா ஹம்ஷியா என்ற 30 வயதான பெண்ணே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
அவர் தற்போது கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து கணவன் கத்தியொன்றை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
கல்பிட்டி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnt7.html
கர்ப்பிணித் தாய் மரணம்: டிப்பர் வாகனத்தை தீயிட்டுக் கொழுத்திய ஊர் மக்கள்! யாழில் பதற்றம்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 07:41.56 AM GMT ]
வீதியில் நின்ற கர்ப்பிணித் தாயொருவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில், அவர் ஸ்தலத்திலே உயிரிழந்த சம்பவம் யாழ். நவக்கிரி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணித் தாய் மீதே டிப்பர் வாகனம் மோதியுள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி தப்பியோடியதையடுத்து, ஆத்திரமுற்ற ஊர்மக்கள் டிப்பர் வாகனத்தை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
அந்த வாகனத்தின் பெருமளவான பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
கோப்பாய், காங்கேசன்துறை, ஆகிய பொலிஸ் நிலையங்களிலிருந்து மேலதிக பொலிஸார் ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவ்விடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியவர்களைத் துரத்தியதுடன், வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnuy.html
ஐஸ் வாளியை தலையில் ஊற்றி கொண்டால் எல்லாம் சரியாகி விடுமா: ரஞ்சன் ராமநாயக்க கேள்வி
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 07:45.54 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின் அரசியல்வாதிகள் உண்மையில் அரசியலில் ஈடுபடுவதில்லை. அதிகாலை முதல் அவர்கள் தொலைபேசிகளில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் பின்னர், விருந்துகளில் கலந்து கொள்கின்றனர். இதனை தவிர வேறு வேலைகளை அவர்கள் செய்வதில்லை.
தற்போது சகல வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஐஸ் வாளி தண்ணீரை தலையில் கொட்டிக்கொள்கின்றனர். தம்மால் செய்ய முடியாமல் போயுள்ள கடமைகளை செய்வது இதனை விட சிறந்தது.
எதிர்காலத்தின் மனிதர்களை மரத்தில் கட்டும் சவால், படையினர் மீது தாக்குதல் நடத்தும் சவால், ஆசிரியர்களை முழங்காலிடும் சவால், போதைப் பொருளை விநியோகிக்கும் சவால், சிறுவர் துஷ்பிரயோக சவால் போன்ற சவால்கள் வரும்.
இதன் பின்னர், விருந்துகளில் கலந்து கொள்கின்றனர். இதனை தவிர வேறு வேலைகளை அவர்கள் செய்வதில்லை.
தற்போது சகல வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஐஸ் வாளி தண்ணீரை தலையில் கொட்டிக்கொள்கின்றனர். தம்மால் செய்ய முடியாமல் போயுள்ள கடமைகளை செய்வது இதனை விட சிறந்தது.
எதிர்காலத்தின் மனிதர்களை மரத்தில் கட்டும் சவால், படையினர் மீது தாக்குதல் நடத்தும் சவால், ஆசிரியர்களை முழங்காலிடும் சவால், போதைப் பொருளை விநியோகிக்கும் சவால், சிறுவர் துஷ்பிரயோக சவால் போன்ற சவால்கள் வரும்.
இதனை விட பல வேலைகளை எம்மால் செய்ய முடியும் எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnuz.html
Geen opmerkingen:
Een reactie posten