தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

இலங்கைக்கு எதிரான பிரச்சினைகளை முறியடிக்க பீரிஸ் ஆலோசனை

ஊவா மாகாணசபை தேர்தல்! வன்முறைகள் அதிகரிப்பு!- தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் - நுரைச்சோலை மின்சார நிலையத்தில் மீண்டும் பிரச்சினை
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 04:31.14 PM GMT ]
ஊவா மாகாணசபை தேர்தல் தொடர்பில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்
இந்த வாரத்தில் மாத்திரம் 20 வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பெபரல் மற்றும் கபே ஆகிய தேர்தல் கண்காணிப்பகங்கள் வன்முறைகள் தொடர்பில் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
எனவே பொலிஸ் மா அதிபரும் தேர்தல்கள் ஆணையாளரும் இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும் என்று கண்காணிப்பகங்கள் கோரியுள்ளன.
ஆகஸ்ட் 24ம் திகதியன்று மாத்திரம் வன்முறை குழுக்கள் எதிர்க்கட்சிகளின் காரியாலயங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.
எனினும் ஒருவர் கூட இந்த சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என்பதை கண்காணிப்பகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
பொதுத்தேர்தலும் ஜனாதிபதி தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில் ஊவா மாகாணசபை தேர்தலின் போது இடம்பெறும் வன்முறைகள் எதிர்கால அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கண்காணிப்பகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நுரைச்சோலை மின்சார நிலையத்தில் மீண்டும் பிரச்சினை. உற்பத்தி தடைப்பட்டது
இலங்கையில் அதிகமாக பிரச்சினைகளை சந்தித்த நுரைச்சோலை அனல் மின்சார நிலையம் இன்று மாலை மீண்டும் ஒருமுறை தொழில்நுட்ப பிரச்சினைக்கு உள்ளானது.
இதன் காரணமாக அந்த மின்சார நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தில் தடைஏற்பட்டு அது தேசிய மின்சார உற்பத்தியிலும் குறைவை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரத்தை உற்பத்தியாக்கும் மின்பிறப்பாக்கியிலேயே இன்று மாலை பிரச்சினை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று இரவு அளவில் மின்சார நிலைய உற்பத்திகள் வழமைக்கு திரும்பும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவினால் அமைக்கப்பட்ட இந்த மின்சார நிலையம் பல தடவைகளாக தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு ஆளானது.
இதன் காரணமாக பல மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnr0.html

இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 04:37.25 PM GMT ]
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞரை தாக்கிய யுவதி கைது
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnr1.html

இலங்கைக்கு எதிரான பிரச்சினைகளை முறியடிக்க பீரிஸ் ஆலோசனை
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 05:00.35 PM GMT ]
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐரோப்பாவை தளமாகக் கொண்ட இலங்கை தூதுவர்களை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற பிரசாரங்களை முறியடிக்கும் வகையிலேயே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ரோமில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது தூதுவர்கள், தமது நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த கலந்துரையாடலில் ஜேர்மனியின் தூதுவர் கருணாதிலக்க அமுனுகம, ஜெனீவா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, இத்தாலிய தூதுவர் பேனாட் குரே, பிராங்போட்டின் தூதரக அதிகாரி பிரதீப் ஜெயவர்த்தன, பிரான்ஸின் தூதுவர் கருணாரட்ன ஹங்காவத்த ஆகியோர் பங்கேற்றனர்.
இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பது குறித்த இந்த கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnr2.html

Geen opmerkingen:

Een reactie posten