லண்டன் மீது ISIS தாக்குதல் நடத்தும் : அதிரும் தகவலை வெளியிடுகிறார் டேவிட் கமரூன் !
[ Aug 30, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 11645 ]
நாம் முன்னர் ISIS தீவிரவாதிகள்தொடர்பாக அறிந்திருந்தோம் ! ஆனால் நாம் நினைத்ததை விட அவர்கள் மோசமாகவும் பயங்கரமாகவும் உள்ளார்கள். லண்டன் மீது அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று அதிரும் தகவலை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் !
முன்னரே இவர்கள், நடவடிக்கை தொடர்பாக நாம் அறிந்து இருந்தோம். ஆனால் நாம் நினைத்து பார்க முடியாத அளவு அவர்கள் பெருகிவிட்டார்கள், என்று அப்பட்டமாக கூறியுள்ளார் டேவிட் கமரூன். ஈராக்கில் சதாமுக்கு எதிராக தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பிரித்தானியா தோள்கொடுக்கும்என்று கூறி தாமும் தமது படைகளை அனுப்பி வைத்தது. அன்றைக்கு தொற்றிக்கொண்ட சனி பகவான் இன்றுவரை விலகியதாக தெரியவில்லை. அன்று முதல் அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் தமது பட்டியலில் முஸ்லீம் தீவிரவாதிகள் சேர்த்துவிட்டார்கள். பின்னர் ஈராக்கில் இருந்து படிப்படியாக பிரிட்டன் தனது படைகளை விலக்கிக்கொண்டது.
ஆனாலும் முஸ்லீம் தீவிரவாதிகள் விட்டபாடாக இல்லை. நேற்றைய தினம்(29) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் உளவுப் பிரிவான MI6 தற்போது கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஈராக் மற்றும் சிரியாவில் தற்போது பலமாக நிலைகொண்டுள்ள ISIS தீவிரவாதிகள், லண்டனை குறிவைத்து தாக்குதல் நடத்தவுள்ளார்கள் என்பது தான் அந்த எச்சரிக்கை ஆகும். இதன் அடிப்படையில் தான் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் இந்த அறிவித்தலை எச்சரிக்கையாக விடுத்துள்ளார். தீவிரவாதிகள் ரயில் நிலையத்தையா ? விமான நிலையத்தையா ? இல்லை நிலத்தின் கீழ் ஓடும் தொடரூந்தையா ? எதனை தாக்க உள்ளார்கள் என்று தெரியவில்லை.
சிலவேளைகளில் மக்கள் அதிகம் நடமாடும் ஷாப்பிங் சென்ரராக கூட அது இருக்கலாம். எனவே லண்டனில் உள்ள தமிழர்கள் இனி வரும் நாட்களில் யாக்கிரதையாக இருப்பது நல்லது. இந்த அச்சுறுத்தல் ஒன்றும் நீண்ட நாளைக்கு இருக்கப்போவது இல்லை. எப்படி என்றாலும் சில வாரங்களுக்குள் ஊடுருவியுள்ள ISIS தீவிரவாதிகளை பிரித்தானிய உளவுப் பிரிவினர் பிடித்துவிடுவார்கள்.
http://www.athirvu.com/newsdetail/886.html
Geen opmerkingen:
Een reactie posten