நல்லூர் திருவிழாவின் நிறைவு நாளில் இலங்கை இராணுவத்தினர் தமிழ் கலாசார உடையணிந்து நடத்திய ஊர்வலத்தின் மூலம், தமிழர் பகுதியை தம்வசப்படுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவம் அதனை விட்டு அகலாது என்பதை கட்டியம் கூறியதாக அமைந்தது என யாழ்ப்பாண செய்தி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தை பல வருடங்களாக கைப்பற்றி வைத்துள்ளனர்.
இந்தநிலையில் இராணுவத்தினர் தமிழ் கலாசாரத்தில் கைவைத்துள்ளமையானது, இந்துக்கடவுளை மையமாகக்கொண்டு இனப்படுகொலை நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதை குறித்துக்காட்டுவதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சிங்கள இராணுவத்தினர் தங்கள் குடும்பங்களை வடக்கு பகுதியில் குடியமர்த்துவதற்காக பல்லாயிரக்கணக்கான வீடுகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாண செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnxz.html
Geen opmerkingen:
Een reactie posten