[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 05:55.01 AM GMT ]
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர, தனது சுய விருப்பின் பேரில் இன்று காலை வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் தயாசிறிக்கு மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதுளை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே தயாசிறி ஜயசேகர திடீர் சுகவீனமடைந்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகள் திடீர் சுகவீனமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோரும் திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnt1.html
சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதி நவீன கருவிகள்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 06:08.58 AM GMT ]
அதி நவீன கருவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்கனவே விலை மனுக் கோரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோதமான பொருட்களை கொண்டு செல்வதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த ஆண்டு பூர்த்தியாவதற்கு முன்னதாக கொழும்பில் காணப்படும் சகல சிறைச்சாலைகளுக்கும் இந்த நவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளுக்கு இவ்வாறு புதிய கருவிகள் பொருத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnt2.html
ராஜபக்ஷவினர் வன்முறைக்கு தயார் என்றால் ஜே.வி.பியும் தயார் - அனுரகுமார திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 06:12.09 AM GMT ]
படால்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, பிரசார மேடைகளை உடைத்து, அலுவலகங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து, அச்சுறுத்தல் விடுத்து, ராஜபக்ஷவினர் தேர்தலுக்கு தயாராகவில்லை. அவர்கள் வன்முறைக்கு தயாராகி வருகின்றனர்.
அப்படியான வன்முறைகளுக்கு அவர்கள் தயார் என்றால், நாமும் தயார். நாங்கள் ஜே.வி.பியினர் என்பதை ராஜபக்ஷவினர் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
ராஜபக்ஷவினர் தமது அதிகாரத்தை தக்கவைக்க எந்த வன்முறையில் ஈடுபடவும் தயாராக உள்ளனர்.
இந்த வன்முறைகளுக்கு மத்தியில் தேர்தல் ஆணையாளர் வானொலிகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கு எவற்றையோ கூறி, தனது கடமையை ஒதுக்கி வைத்து விட்டு, செவ்விகளை மாத்திரம் வழங்கி வருகிறார்.
தேர்தல் வன்முறைகள் பற்றி தேர்தல் ஆணையாளரிடம் கூறினால், நீதிமன்றத்திற்கு செல்லுமாறு கூறுகிறார். அப்படி கூறுவதற்கு தேர்தல் ஆணையாளர் ஒருவர் தேவையில்லை.
அதிகாரத்தை கைவிட்டுச் செல்வது ராஜபக்ஷவினருக்கு பிரச்சினையானது. அதிகாரத்தை கைவிட்டு அவர்களால் வீட்டுக்கு சென்று வெறுமனே இருக்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnt3.html
Geen opmerkingen:
Een reactie posten