தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

உலகத்தை ஆக்கிரமித்துள்ள பிரச்சினைகளால் பாதிப்பு மனித உரிமைகளுக்கே!- நவநீதம்பிள்ளை!

உலக நாடுகள் பிரச்சினைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன இதன் போது முதலாவது பாதிப்பு மனித உரிமைகளுக்கே ஏற்படுவது இயல்பாகிவிட்டது
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தமக்குள்ள அதிகாரத்தை கொண்டு அதனை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என்று அமெரிக்க செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க செய்திச்சேவையின் நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தாம் உரிய அதிகாரத்துடனேயே பேசுவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் இரண்டு தரப்பினரும் போர் நடைமுறைகளை மீறுகின்றனர். இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.
இஸ்ரேல் படையினர் பாலஸ்தீனத்தில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
அதேபோன்று ஹமாஸ் போராளிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
இந்தநிலையில் நவநீதம்பிள்ளை குறித்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளதாக அமெரிக்க செய்திச்சேவை தெரிவிக்கிறது.
இஸ்ரேல் அவரை ஹமாஸூக்கு சார்பானவர் என்று குற்றம் சுமத்துகிறது.
இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறுவதாக அமெரிக்க செய்திச்சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
நவநீதம்பிள்ளை பதவியை விட்டு விலகும் நிலையில் அண்மையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் சில நடவடிக்கைகளையும் கண்டித்திருந்தார்.
உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்க பாதுகாப்பு சபை உரிய பங்கை ஆற்றவேண்டும் என்று அவர் இதன் போது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை தமது அலுவலகம் மனித உரிமைகள் தொடர்பில் சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதும் உள்நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அவர்கள் கவனமாக அவதானிப்பதாக நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns4.html

Geen opmerkingen:

Een reactie posten