[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 12:29.37 AM GMT ]
அரசாங்கம் நாட்டை சொந்த சொத்தாகவே கருதிச் செயற்படுகின்றது.
உலகில், நாட்டின் வளங்களை மிகவும் மோசமாக கொள்ளையிட்ட அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழக்கின்றது.
சசீந்திர ராஜபக்ச இன்று சண்டியராகியுள்ளார்.
முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் ஏன் தேர்தல் சட்டங்களை முழுக்க முழுக்க மீறிச் செயற்பட வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
மக்களை அச்சுறுத்தி ஆயுதங்களைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தலை வெற்றி கொள்ள நினைத்தால் ஜே.வி.பி அதற்கு இடமளிக்காது.
பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் வளர்க்கப்பட்ட கட்சி எமது கட்சி.
எங்களைக் கிள்ளி விடுவதன் மூலம் அச்சுறுத்தி ஒடுக்கி விட முடியாது.
ஊவா மாகாணத்தில் தேர்தல் சட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படவில்லை.
தேர்தல் ஆணையாளர் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு நகைச்சுவை உணர்வை வழங்கி வருகின்றார்.
பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்தவில்லை எனவும், தேவையென்றால் மக்கள் நீதிமன்றின் உதவியை நாடி தேர்தல் சட்டங்களை அமுல்படுத்திக்கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளர் பகிரங்கமாக தெரிவிக்கின்றார்.
ஆளும் கட்சியின் முக்கியஸ்தாகள் பதவியை துறக்கத் தயாரில்லை.
ஏனெனில் அவர்கள் பதவி விலகினால் செய்த ஊழல் மோசடிகள் அம்பலப்பட்டு விடும் என்ற பீதியில் உறைந்துள்ளனர்.
இதனால் என்ன விலைகொடுத்தேனும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஆளும் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் படல்கும்புர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUnx2.html
புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர் ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 12:54.50 AM GMT ]
மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் கும்பாரப்பட்டியில் உள்ள பச்சைபாலமலை வனப் பகுதியில் கடந்த 26-ஆம் தேதி வனத் துறையினர் மரக் கன்றுகள் நடுவதற்காக குழி தோண்டிய போது கண்டெடுக்கப்பட்ட பெரலில் கையெறி குண்டுகள், ஆயுதப் பொருள்கள் கிடைத்தன.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அதிரடிப் படையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
பச்சைபாலமலை பகுதியில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த போது துப்பாக்கி பயிற்சிக்கு பயன்படுத்திய சுவர்களை மர்ம நபர்கள் சிலர் இடித்துத் தள்ளினர்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஓரிடத்தில் நான்கு கல்கள் அடுக்கப்பட்டு அதில் விளக்கு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தளபதி ரோய் நினைவிடம் என எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிரடிப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி- விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி வழங்கிய முகாம் கொளத்தூரில் இயங்கியதாம்? தோண்ட தோண்ட வெடிகுண்டுகள்!
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUnx3.html
Geen opmerkingen:
Een reactie posten