தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

பறிபோகும் மன்னார் “சவுத்பார்” மீன்பிடித்துறை: பேய் வீடாய் காட்சியளிக்கும் வாடிகள்!



மன்னாரில் மிக முக்கிய மீன்பிடித்தளங்களில் ஒன்றான சவுத்பார் என்ற மீன்பிடித்துறை தென் பகுதி மீனவர்களுக்கான ஒரு துறையாக மாற்றும் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.
பருவகால மீன்பிடித்துறையான சவுத்பாரில் தற்போது (சோளகப்பருவம்) எவரும் இல்லாத மனித சஞ்சாரமற்ற தற்காலிக குடிசைகளை (மீன்வாடிகள்) மட்டும் கெண்டுள்ளதுடன் இராணுவமானது, உள்ளூர் மீனவர்கள் எவரையும் அனுமதிக்க விடாது பாதுகாத்தும் வருகிறது.
சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வாடிகள் பேய்வீடுகள் போல எவருமில்லாது காட்சியளிக்கின்றது. பருவம் முடிந்து வெளியேறிய தென்பகுதி மீனவர்கள் வாடை பிறந்ததும் ஒக்டோபர் முற்பகுதியில் மீண்டும் குடும்பங்களாக இப்பகுதிக்கு வருகை தருவர்.
தமக்குரிய வாடிகளில் தங்கி பருவகாலம் முழுவதும் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.
வழமையாக பொதுப்பாடு எனப்படும் சவுத்பார் துறையில் வடபகுதி மீனவர்கள் உட்பட தென்பகுதி மீனவர்களும் தங்கியிருந்து மீன்பிடிப்பது வழமை. இன்று மன்னார் பகுதி மீனவர்கள் குறிப்பாக பனங்கட்டி கொட்டு சாந்திபுரம் பகுதி மீனவர்கள், தென்பகுதி சிங்கள மீனவர்களின் வருகையை எதிர்த்து கடந்த வருடம் ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தனர்.
தங்களது பகுதியை விட்டுக்கொடுக்க இப்பகுதி மீனவர்கள் தயாரில்லை. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில தென்பகுதி மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்ட போதிலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
ஆயினும் இன்றைய சூழலில் இராணுவம் அப்பகுதியில் எவரையும் உள் அனுமதிக்காது தற்கால வாடிகளை பாதுகாப்பதன் நோக்கம் இப்பகுதியை சிங்கள குடியிருப்பாக மாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது.
மன்னாரில் அரச அதிபர் சிங்களவராக இருப்பதால் காரியம் கைகூடுவதில் எந்த தடையும் இருக்கப்போவதில்லை.
யுத்தத்தின்பின் இப்போது இராணுவத்தின் வேலை வடபகுதியில் முடிந்த அளவில் எந்த ரூபத்திலும் நிலங்களை சூறையாடுவதில்தான் முனைப்புப் பெற்றுள்ளது.
கடற்படையில்லாத கரையோரங்ஙளும் இல்லை. காலால்படைகள் இல்லாத காடுகளும் இல்லை. காவல்படைகள் இல்லாத கிராமங்களும் இல்லை.
எங்கும் இராணுவம் எதிலும் இராணுவமே. போதாக்குறைக்கு சந்திகளில் ரொட்டிக்கடைகள் முக்கிய இடங்களில் உல்லாச விடுதிகள் புத்தர் சிலைகள், அரசமரங்கள் என்று விரிவடைந்து பருவகால மீன்பிடி குடியிருப்புக்களையும் ஆக்கிரமிப்பதில் தனது கை வரிசையை காட்டியிருக்கிறது. இன்று சவுத்பார், நாளை சிலாபத்துறையும் தலைமன்னார்பியரும் பறிபோகலாம். தடுத்து நிறுத்துவார் யாரோ?
பேராசிரியர் சூசை ஆனந்தன்
யாழ்.பல்கலைக்கழகம்
assoysa@gmail.com
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnw6.html

Geen opmerkingen:

Een reactie posten