தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

மன்னாரில் "மடு" தேவாலயத்திற்கு செல்லவுள்ள பாப்பரசர்: தடுக்கவேண்டும் என்று துடிக்கும் சிங்களம் !


இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸின் இலங்கை விஜயம் குறித்த நிகழ்ச்சி நிரலை கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சி நிரலின் படி எதிர்வரும் 2015 ஜனவரி 13 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் பரிசுத்த பாப்பரசர், அங்கிருந்து கொழும்பு உயர் மறை மாவட்ட ஆயர் இல்லத்தைச் சென்றடைவதுடன் அங்கு கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவார்.
அதனையடுத்து அங்கு மதிய போசனத்திலும் பங்கேற்க்கும் பாப்பரசர் அன்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதுடன்,ஏனைய மதப் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜனவரி 14 ஆம் திகதி காலை கொழும்பு காலி முகத்திடலில் ஒழுங்கு செய்யப்படும் திறந்தவெளி மத வழிபாட்டு ஆராதனை நிகழ்வில் கலந்துகொள்ளும் பரிசுத்த பாப்பரசர். அன்றைய தினம் மாலை மடு திருப்பதியில் விசேட திருப்பலி ஆராதனையையும் நிறைவேற்றவுள்ளார்.
மடுத்திருப்பதியில் மடு மாத திருச்சொரூப ஆசீர்வாதத்தை மேற்கொள்ளும் பரிசுத்த பாப்பரசர் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் விசேட ஆசீர் வழங்கவுள்ளார் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதில் பல நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மடு மாதா திருக்கோவிலில் அவர் சற்று அதிகமான நேரம் செலவிடவுள்ளதாகவும் அறியப்படுகிறது. இதனால் அவர் மன்னார் ஆயரையும் சந்திக்கவுள்ளார். மன்னார் ஆயர் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளையும், மடு ஆலயம் தாக்கப்பட்டதையும் நிச்சயம் எடுத்துச் சொல்லவுள்ளார். இதனை தடுக்கவே தற்போது சிங்களம் முயன்று வருகிறது. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடாக பாப்பரசரின் நிகழ்சி நிரலை மாற்ற சிங்களம் முற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்சி நிரல் வத்திக்கானில் இருந்து வந்துள்ளதால், இதனை மாற்றுவது என்பது பெரும் கடினமான விடையமாக இருக்கும்.
http://www.athirvu.com/newsdetail/873.html

Geen opmerkingen:

Een reactie posten