[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 01:33.29 PM GMT ]
அவுஸ்திரேலியாவை சேர்ந்த செல்வந்தர்களில் ஒருவரான ஜேம்ஸ் பேக்கர், சுமார் ஒருவருடத்திற்கு முன்னர் தனது திட்டத்திற்கான அனுமதியை இலங்கை அமைச்சரவையில் பெற்றிருந்தார்.
எனினும் சில பௌத்த மத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் வலுவான எதிர்ப்பு காரணமாக ஏற்பட்ட மாற்றங்களால், இந்த நிர்மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
நாட்டின் சட்ட பக்கத்தில் இருந்து வெளியில் குறித்த முதலீட்டு திட்டத்திற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் எவ்வாறு அது மேற்கொள்ளப்பட போகிறது என்பதை அவர் தெளிவாக கூறவில்லை.
நிலத்திற்கு தேவையான கட்டண முறையில், எமது பக்கத்தில் சில சட்ட சிக்கல்கள் இருந்தன. நிர்மாணப் பணிகளை ஆரம்பது தொடர்பில் சில பிரச்சினைகள் இருப்பது குறித்து அவர்களுக்கு அறிவித்துள்ளோம். அதனை ஆரம்பிக்க இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கசினோ சூதாட்டம் இன்றிய ஹொட்டல் அபிவிருத்தித் திட்டத்திற்கு இலங்கை நாடாளுமன்றம் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், உள்நாட்டு அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி உள்நாட்டு பங்காளியுடன் கிரவுண் நிறுவனம் கசினோ சூதாட்ட ஆரம்பித்தால், அதனை தாம் எதிர்க்க போவதில்லை என அரசாங்கம் கூறியிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnq5.html
இலங்கையின் இறையாண்மையில் மேற்குலகம் தலையிட அனுமதிக்க மாட்டோம்: பசில்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:30.37 PM GMT ]
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிட மேற்குலகத்துக்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம் என அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று பூநகரி ஆதார வைத்தியசாலையைத் திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தினார்.
மக்களின் நன்மைகருதி எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடரும். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எவரும் தடை போடக்கூடாது.
வெளிநாடுகளுக்குச் சென்று முறையிடுவார்கள் என்று பயந்து நாம் இங்கு அபிவிருத்தி செய்யவில்லை என்றார்.
மேலும், சிரியா, ஈரான், பாகிஸ்தான், உக்ரைன், ஆப்கானிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் பயங்கரவாதம் என்ற பெயரில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு, மனித உரிமைகள் மீறப்படுகின்றமையை பார்க்கும்போது அச்சம் ஏற்படுகின்றது என அமைச்சர் பசில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnq7.html
Geen opmerkingen:
Een reactie posten