தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

அடக்குமுறைகளுக்கு எதிராக திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (செய்தித் துளிகள்)!

நட்டத்தை மாத்திரம் ஈட்டும் பெற்றோலிய துறைக்கு மேலும் முதலீடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 02:15.10 AM GMT ]
தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அரசாங்கம் மேலும் இரண்டு வருடங்களுக்கு என 230 பில்லியன் ரூபாய்களை முதலீடு செய்யவுள்ளது.
இதன் ஒரு கட்டமாக சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த 1500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராஜவெல முதல் கட்டுநாயக்கவுக்கான எரிபொருள் விநியோக பாதை திருத்தம், 40 முதல் 50 மில்லியன் செலவில் மத்தல விமான நிலையத்துக்கான விநியோக குழாய் அமைப்பு என்பனவும் இதில் அடங்குகின்றன.
இந்தநிலையில் குறித்த முதலீடுகள் காரணமாக சர்வதேச சந்தையின் நெகிழ்வு போக்குக்கு அமைய எரிபொருட்கள் விலைகள் இலங்கையில் குறைக்கப்பட வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைப்பு காரணமாக நேற்று இந்தியாவில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. எனினும் இதனை இலங்கையில் எதிர்பார்க்க முடியாது என்று பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx3.html

அடக்குமுறைகளுக்கு எதிராக திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 02:30.42 AM GMT ]
இலங்கைத் திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அடக்குமுறைகளுக்கு ஆட்சேபம் வெளியிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவில்லை என்று குற்றம் சுமத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக தமது கல்விக்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்திய மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உயர் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரை
ஊவா மாகாண சபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிய குற்றச்சாட்டுக்கு தேர்தல்கள் ஆணையாளரிடம் இருந்து உரிய அவசர நடவடிக்கை அவசியம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழு தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைகளையும் அனுப்பியுள்ளது.
இந்த பரிந்துரைகள் மொனராகலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு கேட்டுள்ளது.
இதனை தவிர பொலிஸ்துறையினர், போக்குவரத்து அமைச்சு, சுற்றாடல்துறை அமைச்சு ஆகியவற்றுக்கும் குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
எவ்வித எதிர் நடவடிக்கைக்கும் தயார்- தேர்தல்கள் ஆணையாளர்
இலங்கையில் ஊவா மாகாண சபைக்காக இடம்பெறும் தேர்தல்களின்போது வன்முறைகள் இடம்பெற்றால் அதனை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தேர்தல் வாக்களிப்புகள் சுயாதீனமாக இடம்பெறவேண்டும். இதன்போது வாக்களிப்புக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமானால் வாக்களிப்பை ரத்து செய்ய தயங்கப் போவதில்லை என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாணசபை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியும் ஜே வி பியும், சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியும் தேர்தல்கள் ஆணையாளர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன.
இந்தநிலையிலேயே வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயங்கப் போவதில்லை என்று மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஊவா மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் 115 வன்முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் மொனராகலையில் மாத்திரம் 84 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx4.html

Geen opmerkingen:

Een reactie posten