தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளையுடன் ஓய்வு



ராஜபக்ச குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள மிதக்கும் சந்தை!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 08:56.37 AM GMT ]
கொழும்பு புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தக நிலைய தொகுதியை திறந்து வைக்கும் விடயம் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த மிதக்கும் வர்த்தக நிலைய தொகுதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டது.
குறித்த அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கண்காணிப்பின் கீழ் இந்த வர்த்தக நிலைய தொகுதியின் திறப்பு விழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேற்படி வர்த்தக நிலைய தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 22 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்ததுடன், ஜனாதிபதி வெளிநாடு சென்றதால் அது ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் திடீரென கடந்த 25 ஆம் திகதி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பும் வரை திறப்பு விழா நிகழ்வை ஒத்திவைக்காமை தொடர்பில் அரசியல் துறையில் பேசப்பட்டு வருகிறது.
குறித்த திறப்பு விழாவில் ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த கோத்தபாய ராஜபக்ஷ மாத்திரம் கலந்து கொண்டார். சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் அதில் கலந்து கொள்ளவில்லை.
ராஜபக்ஷ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை என இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmu3.html
மகிந்த ராஜபக்‌ஷ - ஜோர்ஜ் புஷ் இருவரும் ரகசிய சந்திப்பு!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 09:00.28 AM GMT ]
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ்சை சந்திக்கவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரியாமல் அமெரிக்காவின் வூஸ்டன் நகருக்கு சென்றதாக ராஜதந்திர தரப்புக்களில் பேசப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் எவருக்கும் அறிவிக்காமல் அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றதுடன் இது குறித்து அவரது செயலகம் முன்கூட்டியே அறிவித்திருக்கவில்லை.
ஜனாதிபதி நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தும் வூஸ்டனில் உள்ள அவரது சகோதரர் டட்லி ராஜபக்சவை சந்திக்கும் நோக்கில் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அவரது செயலகம் அறிவித்தது.
2011 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ச இப்படியான திட்டமிடாத விஜயம் ஒன்றை அமெரிக்காவுக்கு மேற்கொண்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியூ.புஷ்சை சந்திப்பதற்காக மஹிந்த அந்த விஜயத்தை மேற்கொண்டதாக பின்னர் தெரியவந்தது.
பயங்கரவாதத்தை தோற்கடிக்க, வேண்டியதைச் செய்யுமாறு ஜோர்ஜ் புஷ் தனக்கு ஆலோசனை வழங்கியதாக மகிந்த ராஜபக்ச முன்னர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கம் இலங்கை மீது குற்றம் சுமத்தி வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி, ஜோர்ஜ் புஷ்சை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை வலுப்படுத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க அவரை பயன்படுத்த ஜனாதிபதி முயற்சித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியிருந்த போதிலும் சுவிஸ்சலாந்து நீதிமன்றத்தின் மூலம் போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜோர்ஜ் டப்ளியூ.புஷ், அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாத நிலைமையை எதிர்நோக்கி வருகிறார்.
இந்த நிலையில், இலங்கை ஜனாதிபதிக்கு அவரால் உதவ முடியாது போகும் எனக் கூறப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு தொடர்பான யோசனையை முன்வைத்தன.
இதனிடையே அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக போர்க் குற்றம் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்ற விடயம் அடங்கிய அறிக்கை ஒன்று கடந்த ஓகஸ்ட் மாதம் அமெரிக்க காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட்டது.
அமெரிக்காவின் சட்ட வல்லுநரான பேராசிரியர் ரயன் குட்மன் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தார்.
இப்படியான நிலைமையில், அமெரிக்க அரசாங்கத்துடன் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதுடன் அதற்கான தனியார் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmu4.html
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளையுடன் ஓய்வு
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 10:15.59 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாளையுடன் (31) அந்த பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இலங்கைக்கு எதிராக பல தகவல்கள் இருப்பதாகவும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐ.நா விசாரணை குழு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என நவநீதம்பிள்ளை இறுதியாக குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை நவநீதம்பிள்ளை ஓய்வுபெறுவது குறித்து கவலை வெளியிட்டு இலங்கையை சேர்ந்த ஐந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளதாக திவயின கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmu5.html

Geen opmerkingen:

Een reactie posten