[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 05:12.38 PM GMT ]
இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் நயினாமடு மக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
போருக்கு பின்னர் பல அரசியல் கட்சிகள் வந்து போகின்றார்கள் அவர்கள் எமக்காக ஒன்றும் செய்யவில்லை. இதனால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
எமக்கு வருகின்ற உதவிகளும் ,சமூக சேவைகளும் முற்றுமுழுதாக எம்மிடம் வந்து சேருவதில்லை. எல்லாம் பக்கச்சார்பாகவே நடைபெறுகின்றது.
இறந்தவர்களையும் எங்களையும் வைத்து அரசியல் நடத்தும் சில அரசியல் கட்சியினர் தமது தேவைகளுக்கு மாத்திரமே வந்து போகின்றனர். அவர்களது தேவைகள் நிறைவேறிய பின்னர் எம்மிடம் வருவதில்லை.
அத்தோடு எமது பிரதேச செயலகத்தின் ஊடான செயற்பாடுகள் சில பக்கச்சார்பாகவே இடம்பெற்று வருகின்றன.
வெளியிடங்களில் இருந்து வருகின்றவர்களுக்கு காணி, வீட்டுத்திட்டம் போன்றன முன்மாதிரியாக வழங்கப்படுகின்றன. ஆனால் எமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்வருவதில்லை.
பல தடவைகள் பலரிடம் எடுத்துக்கூறியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் எமது அவலங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர் .
இந்தநிகழ்வில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr4.html
ஐஸ் வாளி சவால் கலாசாரத்தை பாதிக்கக்கூடாது: மேர்வின் சில்வா
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 04:53.29 PM GMT ]
மறுப்புக்கான காரணங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை, கலாசாரத்தை பாதிக்காத வகையில் நல்ல விடயங்களுக்கு நிதிசேகரிப்புகள் இடம்பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மல்ஸா தம்மை ஐஸ்வாளி சவாலுக்கு அழைத்தபோதும் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் குடிநீருக்கு தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளமையை கருத்திற்கொண்டு தாம் அதனை நிராகரிப்பதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மல்ஸா, அமைச்சர் மேர்வின் சில்வா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரை ஐஸ்வாளி சவாலுக்கு அழைத்திருந்தார்.
இதில் ஹிருணிக்கா மல்ஸாவின் சவாலை ஏற்றுக்கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr3.html
Geen opmerkingen:
Een reactie posten