[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 11:19.57 AM GMT ]
ஏறாவூர், அப்துல் மஜீத் மாவத்தையைச் சேர்ந்த இப்றாஹிம் இஸ்மாயில் ஹமீதா உம்மா (வயது 38) என்ற 5 பிள்ளைகளின் தாய், வறுமை காரணமாக தொழில்வாய்ப்பு தேடி கடந்த 2012ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார்.
அங்கு வீடொன்றில் பணிப்பெண்ணாக அவர் கடமையாற்றிய போதும், நீண்டகாலமாக சம்பளம் வழங்கப்படாமையால் வீட்டு எஜமானிக்குத் தெரியாமல் வேறு வீடு மாறியுள்ளார்.
இந்நிலையில், அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் 6 மாத காலமாக சவூதி, றியாத்திலுள்ள மலாஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆனால், என்ன குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இது தொடர்பில் அப்பெண்ணின் கணவர், கிழக்கு மாகாண அமைச்சர் நஸிர் அஹமட், மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், பிரதேச செயலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறையிட்டார்.
இந்நிலையில், அப்பெண் பணியாற்றிய பழைய வீட்டு எஜமானுடன் தொடர்பு கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட், சிறையிலுள்ள பெண்ணை விடுவிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இதனையடுத்து, விடுதலையான அப்பெண்ணுக்கு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய பழைய வீட்டு எஜமான், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாவை சம்பளமாக வழங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் நேற்று நாடு திரும்பினார் என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmqy.html
ஐஸ் வாளி சவால்: இலங்கை நாடாளுமன்றில் எதற்காக?
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 12:07.16 PM GMT ]
ஐஸ் வாளி சவால் என்பது என்ன என்ற விளக்கமின்றியே பலர் இதனைப் பயன்படுத்தி வருவது சிரிப்பிற்கிடமாகியுள்ளது.
Amgotropic Lateral Scierosis (ALS) என்ற நோயின் பாதிப்பு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கமாக அதற்கான நிதி திரட்டும் தேவைக்காகத் தொடங்கப்பட்டதே இந்த ஐஸ் வாளி சவால்.
சவாலை ஏற்றுக் கொண்டவர் மீது ஐஸ் நீர் வாளியிலிருந்து ஊற்றப்படும். பின் அவர் மேலும், தனக்குத் தெரிந்த மூவரை சவாலை ஏற்றுக் கொள்ளும்படி அழைக்க வேண்டும். இதெல்லாம் 24 மணி நேரத்துக்குள் முடிந்தாக வேண்டம்.
சவாலை ஏற்க மறுப்பவர் Amgotropic Lateral Scierosis அமைப்பிற்கு 100 டொலர் வழங்க வேண்டும் இதுதான் சவால். ஆனால் இந்த ஐஸ் வாளிச் சவால் இன்று பல வித பிரச்சாரங்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தப் படுகின்றது. கனடா,
ரொன்ரோ மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள போட் (ford) தன்னை சமூக வலைத்தளத்தில் பிரபல்யமாக்கிக் கொள்வதற்காக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டார். அவரது படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிற்கு விடுக்கப்பட்ட சவாலை அவர் ஏற்கவில்லை. இதெல்லாம் மேலை நாட்டுச் சமாச்சாரங்கள். ஐஸ் என்ன அவர்களுக்கு புதிதான ஒன்றா? மீன் குஞ்சிற்கு நீந்தக் கற்றா கொடுக்க வேண்டும்.
ஆனால் இச்சவால் எமது பாராளுமன்றில் இன்று அடிக்கடி விடுக்கப்படும் ஒன்றாகக் காணப்படுகிறது. எதற்காகக் கூறுகின்றார்கள் என்பதே குழப்பமாக உள்ளது.
வடமாகாண இருதய நோய் தடுப்புப் பிரிவிற்கு நிதி சேகரிக்கின்றோம் என்று ஒரு சாராரின் சவால்.
எது எப்படி இருந்த போதிலும், தேர்தல் நெருங்கும் போது ஐஸ் வாளி சவாலை எமது அரசியல் ஜாம்பவான்கள் எப்படிச் சவாலாக எடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இணையங்களில் பரபரப்பாகியுள்ள இந்தச் சவாலை ஏற்ற சிலர் மாரடைப்பினால் மரணமான செய்திகளும் எட்டியுள்ளது கவனத்திற் கொள்ள வேண்டியதே என மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmqz.html
Geen opmerkingen:
Een reactie posten