[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 01:50.31 PM GMT ]
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு தம்புள்ள பள்ளிவாசலில் தொழுகைகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் நாளை தம்புள்ளையில் அமைந்துள்ள ரங்கிரி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் இன்று தம்புள்ளைக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று மாலை தொழுகைகளை மேற்கொள்ள தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுள் ஹய்ரா பள்ளிவாசலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர்.
எனினும் பாதுகாப்பு தரப்பினரால் அங்கு செல்ல இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையினால், பாகிஸ்தான் அணி வீரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இலங்கை அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளதாக சில பாகிஸ்தான் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலேவல பள்ளிவாசலுக்கு சென்று, தமது வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பதற்காக பல பௌத்த குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பள்ளிவாசல் புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் அதனை உடைக்குமாறும் தற்போதும் சில பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq2.html
தமிழில் மந்திரம் உச்சரித்த குருக்கள்! உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்த விமானப்படை!
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 08:48.20 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்று சிறப்புமிக்க பெரியபோரதீவு முத்துவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது எதிர்பாராத நேரத்தில் உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிந்தனர் விமானப்படையினர்.
கடந்த இரண்டு தினங்களாக ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று இன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஏற்பாட்டில் குடமுழுக்கு நடைபெற்றபோது விமானப்படையின் உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழியப்பட்டது.
இந்த கும்பாபிசேகத்தின்போது இராஜகோபுரம் மற்றும் பரிபால மூர்த்திகளின ஆலயங்களுக்கும் கும்பாபிசேகம் நடத்தப்பட்டது.
இந்த ஆலயத்தின் கும்பாபிசேகத்தின் சிறப்பம்சமாக தமிழில் மந்திர ஒலி ஒலிக்கப்பட்டு கிரியைகள் நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை இராணுவத்தினர் இந்து ஆலயங்கள் மீது அதீத பற்றுக்கொண்டவர்களாக நடந்துகொள்வதை காணக்கூடியதாக இருப்பினும், நல்லூரில் இலங்கை இராணுவத்தினர் காவடி எடுத்தமையும் ஆச்சரியத்துக்குரிய நகைப்பான விடயமே.
வரலாற்று சிறப்புமிக்க இந்து ஆலய திருவிழாக்களில் இலங்கை இராணுவத்தினர் உலங்குவானூர்தி மூலம் பூமழை பொழிவது அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்தாலும் சில பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன என்பது உண்மையே!
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr5.html
Geen opmerkingen:
Een reactie posten