தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

பேஸ்புக்கினூடாக பெண்கள் துஸ்பிரயோகம்: பொலிஸில் மேலும் இரு முறைப்பாடுகள்

மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்து கவனம்!- ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 04:25.42 PM GMT ]
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிபிலை – மடுல்லயில் இடம்பெற்ற பொது வர்த்தக நிலையம் ஒன்றின் திறப்பு விழாவில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் சாதகமான முடிவு ஒன்று வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போரை நிறைவு செய்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஊவா மாகாண சபையை பொது மக்கள் இந்த முறையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கே வழங்குவார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlry.html
அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சு - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சந்திப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 04:28.53 PM GMT ]
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சக மூத்த அதிகாரிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கன்பராவில் அமைந்துள்ள பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இந்தச் சந்திப்பில், இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சவால்கள், இனப்பிரச்சினைக்கான தீர்வு, இனப்படுகொலை தொடர்பிலான விசாரணை மற்றும் அகதிகள் விவகாரம் என பல்வேறு விடயங்கள் கருத்துப் பரிமாறப்பட்டுள்ளன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் க.மாணிக்கவாசகர், புலம்பெயர் சமூக விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் க.சிறிசுதர்சன், பாராளுமன்ற உறுப்பினர்களான சு.ஸ்கந்தகுமார், மருத்துவர் அபிராமி விசுவநாதன் ஆகியோர் பங்கெடுத்திருந்தினர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோற்றம் அதன் செயற்பாடு நோக்கம் குறித்து இச்சந்திப்பில் எடுத்துரைந்த தமிழர் பிரதிநிதிகள், சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் படிப்படியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு இன்னல்படுவதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை குறித்தும் தெளிவாக முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது நடக்கின்றது பற்றி தங்களுக்குத் தெரியும் எனத் அவுஸ்திரேலிய அரச அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்திருந்ததாக கூறியுள்ள பிரதி அமைச்சர் க.சிறிசுதர்சன் அவர்கள், தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருவதாக தெரிவித்திருந்ததாகவும் கூறியுள்ளார்,
அவுஸ்திரேலிய அரசாங்கம் தமிழ் மக்களின் விவகாரத்தில் முக்கிய பங்கு எடுத்து, சர்வதேச சமூகத்திற்கு ஆதரவு அளிப்பதன் மூலமும் தமிழ் மக்களின் பிரச்சனைகளின் அடிப்படை காரணத்தை கண்டு பிடிப்பதன் மூலமும் அவர்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் எனவும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlrz.html
பேஸ்புக்கினூடாக பெண்கள் துஸ்பிரயோகம்: பொலிஸில் மேலும் இரு முறைப்பாடுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:00.42 PM GMT ]
சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஊடாக நட்புக் கொண்டு பெண்களை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட ஆண்கள் தொடர்பில் மேலும் இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொட்டாஞ்சேனை தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு பெண் தமது முறைப்பாட்டில், ஆண் ஒருவர் போலியாக தமது பேஸ்புக் முகவரியில் பதிவாகி தம்மை பயமுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த ஆண் நட்பு ரீதியாக பழகி பின்னர் பணம் அல்லது பாலியல் தொடர்பு தேவை என்று கோருவதாக பாதிக்கப்பட்ட பெண் முறையிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பேஸ்புக் தொடர்பில் அண்மையில் ஹல்ஸ்ரோப் நீதிமன்ற வளவில் கொலை ஒன்று இடம்பெற்றது.
பேஸ்புக் ஊடாக பழகி தமது மகளை துஸ்பிரயோகம் செய்தவரை இலக்கு வைத்து பெண்ணின் தந்தை மேற்கொண்ட கத்திக்குத்து சம்பவம் ஒன்றில் அண்மையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனையடுத்தே குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlr0.html

Geen opmerkingen:

Een reactie posten