தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

தமிழ் - முஸ்லிம்களின் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்த தீர்மானம்?

மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் வரையில் அரசாங்கத்தின் பயணம் தொடரும்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:24.10 AM GMT ]
இலக்குகள் எட்டப்படும் வரையில் அரசாங்கத்தின் பயணம் நிறுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவில் நேற்று மாலை நடைபெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் வரையில் இந்த அரசாங்கத்தின் பயணம் தொடரும்.
அபிவிருத்தியின் பயன்கள் அனைவராலும் அனுபவிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
முழு உலகையே வெற்றிகொள்ளக் கூடிய இளைஞர் சமூகமொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo1.html
தமிழ் - முஸ்லிம்களின் பொது வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்த தீர்மானம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 05:24.21 AM GMT ]
தமிழ் - முஸ்லிம் மக்களின்  ஜனாதிபதி பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனை தெரிவு செய்வது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நான்காம் திகதி முதல் ஆறாம் திகதி வரையில் வவுனியாவில் நடைபெறவுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது.
யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுபான்மை கட்சிகளின் பொது வேட்பாளராக சீ.வீ.விக்னேஸ்வரனை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதா அல்லது ஏதேனும் ஓர் கட்சிக்கு ஆதரவளிப்பதா என்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்திய விஜயத்தின் பின்னர் பொது வேட்பாளர் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlo2.html

Geen opmerkingen:

Een reactie posten