அவுஸ்ரேலியா கன்பராவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்திற்கு அருகில் ‘அகதிகள் தூதரகம்’ என்பதைப் போன்றதொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களை நடத்தும் விதத்தை கண்டிக்கும் விதத்தில், குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் சுமார் 100 பேர் வரை திரண்டு சன நெரிசல் மிக்க நேரத்தில் வீதிமறியல் போராட்டம் ஒன்றை செய்துள்ளனர்.
குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுக்கும், அவர் தற்போது நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கும் சிறைக்கு ஒப்பான கொள்கைகளுக்கும் எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் முதல் நடவடிக்கை இதுவென கூடியிருந்தவர்கள் தெரிவித்தார்கள்.
அமைச்சரின் கொள்கையில் மாற்றம் ஏற்படவிடின் தங்களது போராட்டம் மேலும் பாரிய அளவில் முன்னெடுக்கப்படுமென அந்த அமைப்பின் ஏற்ப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாரிய மனித உரிமை மீறலில் ஈடுபடும் மொறிசன்: அகதி அமைப்பு குற்றச்சாட்டு
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ள அகதி முகாம், நல்ல வசதிகளுடன் இருப்பதாக, குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்திருந்தார்.
எனினும் அது முற்றிலும் பொய்யான தகவல் என அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது முகாமில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள படங்கள் வெளியானமையை அடுத்து, பாரிய மனித உரிமை மீறலை மொரிசன் செய்து வருவதாக அகதி அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmo2.html
Geen opmerkingen:
Een reactie posten