வாரியப்பொல தாக்குதல் சம்பவம். வீடியோ எடுத்தவரை தேடி பொலிஸ் வலைவீச்சு!- வாழைச்சேனையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 01:04.58 AM GMT ]
அவரது வாக்குமூலத்தை பெற்றுக் கொள்வதற்காகவே பொலிஸார் அவரை தேடுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இளைஞரை தாக்கியமைக்காக கைதுசெய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட யுவதி அடிப்படை உரிமைமீறல் மனுவை தாக்கல் செய்யப் போவதாக வெளியான தகவல் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் கருத்து வெளியிட்டார்.
அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்வது சிறந்த நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், தம்மை கேலி செய்தவரை தாக்குவதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமையிருக்கிறதா? என்பதை உயர்நீதிமன்றம் முடிவுசெய்யும் என்று குறிப்பிட்டார்.
இதன்போது சிறந்த ஒரு தீர்ப்பு வெளிப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
வாழைச்சேனையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.
ஓட்டமாவடி ஆற்றில் ஓட்டமாவடி பாலத்தில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னால் உள்ள ஆற்றில் இருந்து இந்த இளைஞனின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இவர் தொடர்பான தகவல்களை
பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இவர் தொடர்பான தகவல்களை
பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடி நிற்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு தோணியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கண்டு தெரியப்படுத்திய தகவலையடுத்தே பொது மக்களின் உதவியுடன் சடலம்
எடுக்கப்பட்டதாகவும், இச்சடலம் மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார்
தெரிவித்தனர்.
எடுக்கப்பட்டதாகவும், இச்சடலம் மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms3.html
இலங்கை போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. குழு தமது இயலுமையை காட்டவேண்டும்!- செய்தியாளர்கள் கருத்து
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 01:36.07 AM GMT ]
ஊடகவியலாளர்களின் கருத்துக்களை தாங்கி இணையத்தளம் ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்;டுள்ளது.
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களில் இலங்கை அரச படையினரும் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இதனை முன்னர் முழுமையாக மறுத்த இலங்கை அரசாங்கம் தற்போது மக்களின் உயிரிழப்புகளை குறைத்துக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசாங்கம் கூறியதை அடுத்தே ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து தமது விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.
இதன்போது இலங்கையில் உள்ள போர்க்குற்ற சாட்சிகளை வீடியோ கொன்பரன்ஸ் மற்றும் ஸ்கைப் போன்ற தொழில்நுட்பங்களின் ஊடாக அவர்கள் சாட்சியமளிக்க செய்கின்றனர்.
இது இலங்கை மக்கள் மத்தியில் உண்மையான விசாரணைத் தோற்றத்தை ஏற்படுத்தாது என்றே செய்தியாளர்களின் கருத்தை தாங்கி வரும் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
எனவே ஐக்கிய நாடுகள் சபை தமக்கிருக்கும் அதிகாரத்தை கொண்டு இலங்கை விசாரணையில் தமது இயலுமையை காட்டவேண்டும் என்று இணைத்தளத்தில் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUms4.html
Geen opmerkingen:
Een reactie posten