முகூர்த்த நேரம் நெருங்கியதால் தடை தாண்டி ஓடிய மணமக்கள்
சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில்(எண்.06005) வருவதையொட்டி கேட் மூடப்பட்டிருப்பதாக கேட் கீப்பர் தெரிவித்தார். அரைமணி நேரம் கடந்தும் ரயில்வே கேட் திறந்தபாடில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொறுமை இழந்தனர்.இந்நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து குறுக்குத்துறை முருகன் கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருந்த மணமக்கள் அந்த வழியாக வேனில் வந்தனர். ரயில்வே கேட் மூடப்பட்டதால் வேன் கடந்து செல்ல முடியவில்லை. நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப்படாததால் மணமக்கள் மற்றும் அவர்களுடன் வந்த உறவினர்கள் பரிதவித்தனர்.இந்த நிலையில் முகூர்த்த நேரம் நெருங்கியதால், கோயிலில் இருந்து மணமக்களுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ச்சியாக செல்போனில் அழைப்புகள் வரத்துவங்கின. பொறுமையிழந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள் வேனில் இருந்து இறங்கி, ரயில்வே கேட்டை குனிந்தவாறு கடந்து அவசர, அவசரமாக எதிர்முனைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து குறுக்குதுறை முருகன் கோயிலுக்கு விரைந்து முகூர்த்த நேரம் முடியும் முன்னர் தாலி கட்டினர்.
இதேபோல் திருமணத்தில் கலந்து கொள்ள இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அவசர வேலை நிமித்தம் செல்லும் பொதுமக்கள் தங்கள் டூவீலர்களோடு கேட்டை உயர்த்தி மறுபக்கம் சென்ற வண்ணம் இருந்தனர். இந்த ‘திக், திக்‘ காட்சிகளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 45 நிமிடங்களுக்கு பின்னர் சிறப்பு ரயில் மீனாட்சிபுரம் ரயில்வே கேட்டை கடந்து சென்றது.
http://www.jvpnews.com/srilanka/80725.html
ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி செல்லக்கதிர்காமத்தில் விசேட பூஜை!
முதன் முறையாக இவ்வாலயத்தில் தேர் பவனியும் இடம்பெற்றது. இங்கு நடைபெற்ற சிறப்பு கணபதிஹோமத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆசிவேண்டி பூஜைகள் இடம்பெற்றதுடன், நாட்டிலுள்ள பெளத்த, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் ஆசி வேண்டி விசேட பூஜைகளும் நடைபெற்றதாக சர்வதேச இந்துமத பீட செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திரக் குருக்கள் பாபுசர்மா தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/80728.html

கிளிநொச்சி கந்தன் குளம் ஒரு குடும்பத்தைசேர்ந்த இருவர் உட்பட மூன்று மாணவிகளின் உயிரை பறித்தது
இவர்கள் மூவரும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களென தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வரட்சி காரணமாக வற்றி சேறாக காணப்படும் குளங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான நிலைகளில் குளித்துவருகின்றார்கள்.
கிளிநொச்சியில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் வரட்சியும் .
குளங்களும் வற்றி ஆபத்தான நிலையில் காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த இளம்பிஞ்சுகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/80731.html
Geen opmerkingen:
Een reactie posten