தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

சமய வணக்க நிகழ்வும் நிறுத்தம்: சிவில் உடை புலனாய்வாளர்களால்!


வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிப் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படவேண்டும் என்று இறைவனை வேண்டி நாளை சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் பூந்தெளிர் மகளிர் அமைப்பின் யாழ்.மாவட்டக் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீப ஆராதனை நிகழ்வு கடைசி நேரத்தில் இராணுவ சிவில் உடை அணிந்த புலனாய்வாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருபவை வருமாறு வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர வேண்டும் என வேண்டி, பூந்தெளிர் மகளிர் அமைப்பின் யாழ். மாவட்டக் கிளையினர் நாளை சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலையத்தில் மாலை 3 மணியளவில் தீப ஆராதனை நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் வடக்குப் பிரதேச மக்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அத்துடன் நாளைக் காலை 11 மணிக்கு யாழ். மாவட்ட அரச அதிபருக்கு ஒரு மகஜர் ஏற்பாட்டளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த சபாபதி நலன்புரி நிலைய வாசி ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களுக்குத் தகவல் தெரிவித்தார். சிவில் உடை தரித்த இராணுவப் புலனாய்வாளர்கள் அவரையும் அழைத்துக்கொண்டு ஏற்பட்டாளர்களைச் சந்தித்து மிரட்டியுள்ளனர்.

தாம் பலாலி பாதுகாப்புப் பிரிவிலிருந்து வருகின்றனர் எனவும், அரசுக்கு எதிரான எந்த நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் எனவும், நடத்தினால் பாரிய பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளனர்.

அதற்கு ஏற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிராக தாம் எந்த நிகழ்வையும் நடத்தவில்லை என்றும் தாம் கடவுள் நம்பிக்கையான ஒரு நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த புலனாய்வுப் பிரிவினர் இந்நிகழ்வை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் மிரட்டிச் சென்றுள்ளனர்.

அதனையடுத்து இந்நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அரச அதிபருக்கு காலையில் மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவ் அமைப்பினர் தெரிவித்தனர்.
29 Aug 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409303339&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten