தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

வாகிஷ்ட முழு விசரன்! அனுர சேனாநாயக்க பச்சை கள்ளன்: ஜனாதிபதி புலம்பல்

நன்மதிப்பை மேம்படுத்த பொதுபல சேனா முயற்சி- டிலந்த விதானகே
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 06:27.07 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை போக்குவதற்கு தாம் முயற்சி செய்து வருவதாக அவ் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பு தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் நிறைவேற்று தெரவித்துள்ளார்.
நேற்றைய தினம் பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச ரீதியில் பொதுபல சேனா அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை போக்கி, நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய பிரதிநிதி, உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமது அமைப்பு தொடர்பில் சில தரப்பினர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்திய அவர், எதிர்வரும் நாட்களில் ஏனைய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடனும் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnt4.html
வாகிஷ்ட முழு விசரன்! அனுர சேனாநாயக்க பச்சை கள்ளன்: ஜனாதிபதி புலம்பல்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 06:46.24 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பிரதான அதிகாரிகள் சிலருடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவை மோட்டார் சைக்கிளில் பின்தொடரும் நபர்கள் யார் என சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர், இது புலனாய்வுப் பிரிவின் தலைவர் நிமல்சந்திர வாகிஷ்டவின் வேலை எனக் கூறியுள்ளார்.
வாகிஷ்டவின் நபர்களே உபுல் ஜயசூரியவை பின் தொடர்ந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாகிஷ்ட எந்த வேலையை செய்தாலும் அதனை குழப்பி கொண்டு விடுவார் என்பது அறிந்த விடயம் என்று பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பதிலால் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதி, வாகிஷ்ட முழு விசரன். அவரது அறிக்கைகளை படிக்கும் போது அவன் அரை பைத்தியம் என்று நினைத்தேன். செய்யும் வேலைகளை பார்த்தால் அவன் முழு பைத்தியக்காரன்.
வாகிஷ்டவையும் அரச புலனாய்வு சேவையையும் விரைவில் அங்கொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அடுத்தவன் அனுர சேனாநாயக்க, அவன் பச்சை கள்ளன். அவனுக்கு பாதாள உலகத்தினர் செலுத்தும் கப்பம் தொடர்பான பட்டியல் என்னிடம் இருக்கின்றது.
இவர்கள் இருவரும் கோத்தபாயவின் பலத்தை கொண்டு விசர் கூத்தாடி வருகின்றனர்.
புதுமையான துரதிஷ்டம் எமக்கு ஏற்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் அதிகாரத்தை பயன்படுத்தி ஏதவாது செய்யும். 
கோத்தபாய அதற்கு இடமளிக்க மாட்டார் என்பது எனக்கு தெரியும். என்ன செய்வதென்றே எனக்கு புரியவில்லை என ஜனாதிபதி புலம்பியவாறு அமைதியானதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதிக்குள் இருக்கும் பிரச்சினையை புரிந்து கொண்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் அதற்கு பின்னர் எதனையும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnt6.html

Geen opmerkingen:

Een reactie posten