தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 26 augustus 2014

விகாரைக்கு நிலம் சுவீகரிப்பு: புல்மோட்டையில் முறுகல் நிலை

விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் தொடர்பில் மீளாய்வு
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 10:52.55 AM GMT ]
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் பொருளாதார நிலை, சமூகமயம் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் இதனூடாக கண்டறியப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வவுனியா புனர்வாழ்வு மையத்தில் 109 பேருக்கு தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ஒரு வருடகால பயிற்சிகளை முன்னெடுக்கும் இவர்கள் அடுத்தவருடத்தின் நடுப்பகுதியில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  சுட்டிக்காட்டினார்.
மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மீளாய்வு நடவடிக்கைகள் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev1.html

விகாரைக்கு நிலம் சுவீகரிப்பு: புல்மோட்டையில் முறுகல் நிலை
[ செவ்வாய்க்கிழமை, 26 ஓகஸ்ட் 2014, 11:31.54 AM GMT ]
திருகோணமலை புல்மோட்டையில் அரிசிமலைப் பகுதியில் விகாரைக்காக காணி,  நில அளவை திணைக்களத்தினால் மேற்கொள்ளவிருந்த நில அளவீடு மக்களின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றி உள்ளது. இதனால் பதற்றமான சூழ்நிலை அங்கு நீடிக்கின்ற நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த மேலதிக காவல் துறையினரும், படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களிற்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தே விகாரை மற்றும் பன்சலை அமைக்கப்பட்டுள்ளது.
அதனை விஸ்தரிக்க ஏதுவாக இன்று அளவைகள் மேற்கொள்ள திட்டமிடப்படிருந்தது.
நில அளவை பணிகளை மேற்கொள்ள நில அளவை பணியாளர்கள் வருகை தந்திருந்தனர்.
இவர்களுக்கு எதிராக குறித்த இடத்தில் 1000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இன்று மேற்கொள்ளப்படவிருந்த நில அளவை நடவடிக்கையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமெனவும் எனினும், மற்றுமொரு தினத்தில் குறித்த நில அளவை நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதன்போது அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸார் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRaLdev2.html

Geen opmerkingen:

Een reactie posten