[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 10:46.41 AM GMT ]
2002-02-12 அன்று காலி - உடுகம தோட்ட பங்களாவில் தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளான இருவருக்கு மேற்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காலி மாகாண மேன்முறையீட்டு நீதவான் பத்மா பலியக்காரவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படதையடுத்து மேற்படி மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பணிப் பகிஸ்கரிப்விற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு
மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி வரையில் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோயாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் நடத்தி வரும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தினால் பாரியளவில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டம்
ஊவா மாகாண சபை தேர்தலை முன்னிட்டு ஹப்புத்தளை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேர்தல் பிரச்சார கூட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதித் பண்டார, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண சபை இ.தொ.கா வேட்பாளர்கள், இ.தொ.கா முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp6.html
முன்னேஸ்வர ஆலய மிருகபலிக்கு எதிரான வழக்கு: மூன்றாம் திகதி தீர்ப்பு- யாழில் அறவழிப் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 11:11.36 AM GMT ]
குறித்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், எதிர்வரும் மூன்றாம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
மிருக பலி பூஜையின் மூலம் விலங்குகள் சித்திரவதை சட்டம் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பில் தேசிய பிக்குகள் சம்மேளனம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்தனர்.
முன்னேஸ்வர ஆலய மிருக பலி பூஜைக்கு பிக்குகள் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிருகபலிக்கு எதிராக யாழில் 31ம் திகதி அறவழிப் போராட்டம்
யாழ்.தென்மராட்சி சைவ ஆலயங்களில் மிருகபலியிடல் வழிபாடு மீள ஆரம்பிக்கப் பட்டிருக்கும் நிலையில், குறித்த மிருகபலியிடல் வழிபாட்டு முறைக்கு எதிராக அறவழி போராட்டத்தை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கவுள்ளதாக மிருக பலியிடலுக்கு எதிரான அறவழி போராட்டக்குழு தெரிவித்துள்ளது.
மேற்படி பகுதியில் உள்ள சைவ ஆலயங்களில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மிருக பலியிடல் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இவ் வழிபாடு சைவ விழுமியங்களுக்கு எதிரானவை என கூறியிருக்கும் மேற்படி அறவழி போராட்டக் குழு இதனை எதிர்த்து கைதடியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp7.html
Geen opmerkingen:
Een reactie posten