அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான விண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து சென்று கோத்தாபயவிற்கு நெருக்கமான புள்ளி ஒருவரும் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து விற்பனை செய்துவருகிறார் என, அதிர்வின் யாழ் புலனாய்வு செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையினை பெயரளவில் கூட்டமைப்பு ஆளும் நிலையில் அது எதனையும் பொருட்படுத்தாது மணல் வியாபாரம் கொடிகட்டி பறப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மணல் அகழும் பகுதியில் மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கிளில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்தவும் உள் மோதல்கள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தவும் அண்மையில் விசேட அதிரடிப்படை பாதுகாப்பினை பொறுப்பேற்றுள்ளது.
இதனிடையே இப்பகுதியில் சில நபர்கள் அனுமதியின்றி பாரவூர்தியில் மணல் அள்ளும் நடவடிக்கையில் திங்கட்கிழமை மாலை ஈடுபட்டதாகவும்;, அங்கு விசேட அதிரடிப் படையினர் சென்றிருந்த வேளை, மணல் அள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பாரவூர்தியை கைவிட்டுவிட்டுத் தப்பியோடியதாகவும் இதனையடுத்து, பாரவூர்தியை கைப்பற்றிய விசேட அதிரடிப் படையினர், அதனை பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டக்ளசின் மகேஸ்வரி பவுன்டேஷன் வாயில் மண்ணை போட்டுள்ளார் கோட்டபாய ராஜபக்ஷ !
http://www.athirvu.com/newsdetail/880.html
Geen opmerkingen:
Een reactie posten