தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

யாழ்.நவக்கிரி விபத்துத் தொடர்பில் பக்கச்சார்பாக நடக்கவில்லை: பொலிஸார்- சாரதிக்கு விளக்கமறியல்!

மூன்று பேரைக் கொலை செய்த இருவருக்கு மரண தண்டனை!
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 10:46.41 AM GMT ]
மூன்று பேரைக் கொலை செய்த இருவருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
2002-02-12 அன்று காலி - உடுகம தோட்ட பங்களாவில் தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளான இருவருக்கு மேற்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காலி மாகாண மேன்முறையீட்டு நீதவான் பத்மா பலியக்காரவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படதையடுத்து மேற்படி மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp6.html

யாழ்.மாவட்டத்தில் இருக்கக் கூடாது: கமலேந்திரனுக்கு பிணை - தேசியக்கொடியை முந்திய வடமாகாண கொடி
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 07:19.13 AM GMT ]
யாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் றெக்சியனின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரனுக்கு யாழ்.உயர் நீதிமன்றம் இன்றைய தினம் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கியுள்ளது.
மேற்படி பிரதேச சபையின் தலைவர் றெக்சியன் கடந்த டிசம்பர் மாதம் 27ம் திகதி புங்குடு தீவு பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் தலையில் சுடப்பட்டு உயிரிழந்தமையினை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஈ.பி.டி.பி அமைப்பின் யாழ். மாவட்ட  முன்னாள் அமைப்பாளராக இருந்த க.கமலேந்திரன் கைது செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுவந்த நிலையில் குறித்த வழக்கு யாழ்.உ யர் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நிபந்தனையாக அவர் யாழ்.மாவட்டத்தில் இருக்க கூடாதெனவும், கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து தொடர் பொலிஸ் காண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அந்த நிபந்தனையில் சுட்டப்பட்டுள்ளது.
தேசியக்கொடியை முந்திய வடமாகாண கொடி
தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்னர் வடமாகாண கொடியும், யாழ்.மாவட்ட கணக்காய்வாளர் திணைக்கள கொடியும் ஏற்றப்பட்ட சம்பவம் இன்று கணக்காய்வாளர் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.    
யாழ்.. மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள யாழ். மாவட்ட கணக்காய்வாளர் தலைமை அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம் பெற்ற போது வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமியினால் தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்னர் வடமாகாண கொடி ஏற்றப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmpz.html

யாழ்.நவக்கிரி விபத்துத் தொடர்பில் பக்கச்சார்பாக நடக்கவில்லை: பொலிஸார்- சாரதிக்கு விளக்கமறியல்!
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 07:57.02 AM GMT ]
யாழ். நவக்கிரி பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என கூறியிருக்கும் பொலிஸார், சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கையினையே தாம் மேற்கொண்டாதாகவும் கூறியுள்ளனர்.
இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில்,
குறித்த விபத்துச் சம்பவத்தில் கர்ப்பவதி பெண் ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக பொலிஸார் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கே உயிரிழந்த நிலையிலிருந்த பெண்ணை மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்டபோது அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார் என எமக்கு தெரியாது.
அவ்வாறே தெரிந்தாலும் அதனை பொலிஸார் உறுதிப்படுத்த முடியாது. வைத்தியரே உறுதிப்படுத்த வேண்டும்.
ஒருவேளை அவர் காப்பாற்றக் கூடிய நிலையில் இருந்திருக்கலாம். அதற்காக நாங்கள் சாட்சிகளை அழித்தோம் என அர்த்தப்படாது. மேலும் குறித்த விபத்துச் சம்பவத்தில் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியவர்களை, அடையாளம் காண முடியவில்லை.
எனவே நாங்கள் இதுவரையில் எவரையும் கைது செய்யவில்லை. மேலும் குறித்த வாகனம் மகேஷ்வரி நிதியத்திற்குச் சொந்தமானது. எனவே அந்த வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட மணலுக்கு ஆவணம் உள்ளதா? என நாம் கேட்டோம். ஆனால் அவர்களிடம் ஆவணம் இல்லை.
ஆவணம் எரிந்துவிட்டதாக கூறியிருக்கின்றார்கள். ஆனாலும் குறித்த ஆவணத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். எனவே பெற்றுக் கொடுப்பதாக கூறுகின்றார்கள்.
கர்ப்பிணித் தாய் பலி- சாரதிக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம், நவக்கிரி சரஸ்வதி வீதியில் நின்றுகொண்டிருந்த கர்ப்பிணித் தாய் மீது டிப்பர் வாகனத்தை மோதிய சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி செப்டெம்பர் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்  ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நவக்கிரி சரஸ்வதி வீதியில் 25 வயதான கசிந்திரன் சுபாசினி என்ற கர்ப்பிணித் தாயொருவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில், அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி தப்பியோடியதையடுத்து, ஆத்திரமுற்ற ஊர்மக்கள் டிப்பர் வாகனத்தை தீயிட்டு எரித்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp2.html

Geen opmerkingen:

Een reactie posten