தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 30 augustus 2014

இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற காணாமல்போனோர் உறவினர்களின் ஆர்ப்பாட்டம்




வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோய் பரவல்: 1000 பேர் உயிரிழப்பு (செய்தித்துளிகள்)
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 01:18.46 PM GMT ]
வவுனியா மாவட்டத்தின் 29 கிராமங்களில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட பலர் உள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இந்த நோய் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
சிறுநீரக நோய்களுக்கு பெரும்பாலும் விவசாயிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால தெரிவித்துள்ளார்.
வவுனியாவின் தென்பகுதியிலேயே இந்த நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நோயினால் தமிழ் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை.
இதற்கு காரணம் தமிழ் விவசாயிகள் மத்தியில் இரசாயன பசளை பாவனை ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளமையாகும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையின் வடமத்திய மாகாணத்திலேயே சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீர்காகம் இராணுவ போர் பயிற்சிகள் எதிர்வரும் இரண்டாம் திகதி ஆரம்பம்
இலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படையினர் இணைந்து ஒழுங்கு செய்யும் நீர்காகம் கூட்டு போர் பயிற்சிகள் எதிர்வரும் இரண்டாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியில் 2500 இலங்கை முப்படையினர் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். போர் பயிற்சிகளில் 6 நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டில் உள்ள காட்டுப் பகுதிகளில் இந்த போர் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் அனைத்து போர் தொடர்பான பயிற்சிகளும் இதன் போது மேற்கொள்ளப்படவுள்ளன.
பணிப் புறக்கணிப்பை நிறுத்த தமிழக மீனவர்கள் முடிவு
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் புதுடில்லியில் சந்திப்பு நடத்தியதை தொடர்ந்து மீனவர்கள் தாம் மேற்கொண்டு வந்த பணிப் புறக்கணிப்பை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.
இதன்படி தமது பணிப் புறக்கணிப்பு எதிர்வரும் திங்கட்கிழமையன்று நிறுத்தப்படவுள்ளது.
தமிழக மீனவர் சங்க செயலாளர்களான என்.டி.போஸ் மற்றும் பி.சேதுராஜா ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை இலங்கையினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 63 படகுகளையும் விடுவிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையில் பெருநாள் பருவம் வரும் நிலையில் பட்டினி நிலை ஏற்படுவதை தவிர்க்கும் முகமாகவே தாம் பணிப் புறக்கணிப்பை நிறுத்த முடிவெடுத்ததாக மீனவ சங்கத்தின் தலைவர் நம்பு சேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கல்குடாத் தொகுதி கிளை தலைவருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்குடாத் தொகுதிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. நிர்வாகத் தெரிவு கல்குடாத் தொகுதியில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் நான்கினையும் உள்ளடக்கியதாக பகிர்வு செய்யப்பட்டது. அத்துடன் நிர்வாக உறுப்பினர்கள் ஒவ்வொரு கிராமங்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அந்தவகையில் தலைவராக மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம், உப தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் க.சௌந்தரராஜன், செயலாளராக க.நல்லரெட்ணம், உப செயலாளராக திருமதி.மு.பொன்மணி, பொருளாளராக ப.சிவநேசன் மற்றும் உறுப்பினர்களாக ந.சிவனடியான், ஜி.கேசவமேனன், கி.சேயோன், ப.நவதீபன், க.கமலநேசன், த.சந்திரகாசன், இ.பற்குணன், எஸ்.சுதர்சன், ஆ.பாஸ்கரன், வே.குகதாசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv4.html

இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற காணாமல்போனோர் உறவினர்களின் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 01:28.11 PM GMT ]
சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் உறவினர்களால் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்பட்டது.
ஊர்வலத்திற்கு பொலிஸார் மற்றும் படைப்புலனாய்வாளர்கள் கடுமையான அச்சுறுத்தல் விடுத்தபோதும் குறித்த போராட்டம், வெற்றிகரமான நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சர்வதேச காணாமல்போனவர்கள் தினமாகும்.
இந்நிலையில் வட மாகாணத்தில் யுத்தத்தின் முன்னரும், பின்னரும் காணாமல்போனவர்களை தேடி தருமாறுகோரி காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா நகரசபை மண்டபத்தில் கவனயீர்ப்பு கூட்டம் ஒன்றிணை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த கூட்டத்தின் நிறைவில் மகஜர் ஒன்றிணை மாவட்டச் செயலகத்தில் கையளிக்க திட்டமிடப்பட்டிருந்தது.  அவ்வாறே மகஜர் கையளிப்பதற்கு கூட்டம் நிறைவடைந்ததும் மக்கள் ஊர்வலமாக சென்ற வேளை, நீதிமன்ற வீதியில் வைத்து கலக தடுப்பு பொலிஸார் மக்களை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். அதன் பின்னர் மக்கள் பொலிஸாருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா மற்றும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
வடமாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பொலிஸாருடன் தர்க்கப்பட்ட மக்கள் பொலிஸாரின் எதிர்ப்பினையும் மீறி மாவட்டச் செயலகத்திற்குச் சென்றனர். எனினும் மக்கள் கொண்டு சென்ற மகஜரினை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்க அதிபர் உட்பட எந்தவொரு அதிகாரிகளும் முன்வரவில்லை.
இந்நிலையில் மக்கள் பிரதான வீதியை மறித்து, மக்கள் மதியம் 2 மணி வரையில் வீதியில் அமர்ந்திருந்து எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கும் பொலிஸார் மறுப்பு தெரிவித்ததுடன், மக்களை அச்சுறுத்தும் வகையில் படைப்புலனாய்வாளர்கள் நடந்து கொண்டனர். எனினும் மக்கள் எதற்கும் அஞ்சாமல் வீதியில் அமர்ந்து தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனையடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக, மக்கள் வீதி மறியல் போராட்டத்தை கைவிட்டு தாங்கள் தயாரித்த மகஜரினை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவைசேனாதிராசாவிடம் காணாமல்போனவர்களின் உறவினர்கள் கையளித்துள்ளனர்.
நகரசபை மண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் உரையாற்றினர்.
காணாமல் போனோரை நினைவுகூர பொலிஸார் தடை
காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தினத்தை முன்னிட்டு வவுனியா நகரில் நடைபெற்ற பேரணியை, கூட்டம் நடைபெறவிருந்த வவுனியா நகர சபை விளையாட்டு மைதானத்திற்கு செல்ல விடாமல் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாருக்கும் பேரணி மற்றும் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பொதுபல சேனா போன்ற அமைப்புகளுக்கு இல்லாத சட்டம், அப்பாவி பிள்ளைகளுக்காக பெற்றோர் நடத்தும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு எப்படி அமுல்படுத்தப்படுகிறது என ஏற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள்,  நகர சபை மைதானத்திற்குள் செல்ல பொலிஸார் இடமளிக்கவில்லை என்பதால், அவர்கள் பிரதான வீதியில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmv5.html

Geen opmerkingen:

Een reactie posten