[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 08:28.00 AM GMT ]
திவிநெகும சஹான அருண என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பிணையின்றி குறைந்த வட்டி அடிப்படையில் கடனை பெற முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சமுர்த்தி வங்கி சங்கங்களுக்கு நேற்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு நாளைக்குள் வங்கிகள் 100 பேருக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான கடனை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடனை பெற்றுக்கொள்ள உடனயாக சமுர்த்தி வங்கிகளுக்கு செல்லுமாறு ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அரசாங்கத்தின் அரசியல் திட்டங்களில் பங்கெடுக்க விரும்பாத சகல சமுர்த்தி அதிகாரிகளையும் பணியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் மேற்படி அவசர கடன் வழங்கல் மூலம் வங்கிகள் நிதி பாதிப்புகளை எதிர்நோக்கும் என சமுர்த்தி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியின்றி பதுளையில் சுதந்திரக் கட்சியின் மாநாடு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி பதுளையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் வூஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு மாத காலம் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள ஆலோசனை காரணமாக சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அவர் கலந்து கொள்வதில் தடையேற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் கட்சியின் மாநாட்டில் மாத்திரம் கலந்து கொள்ள செய்து விட்டு மீண்டும் அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைப்பது தொடர்பான முயற்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு நாளைய தினம் இலங்கை வந்தடைய உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnu1.html
இலங்கை அரசின் அடிவருடியான கௌசால் தமிழருக்கு கட்டளையிட யார்? –குமரகுருபரன்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 07:56.47 AM GMT ]
ஜனாதிபதியிடம் நியமனம் பெறுவதற்கு முன்பே தமிழர்களை அரசுடன் இணைந்து போக வேண்டுமென கூறிய இந்தியரான கௌசால் தமது நடு நிலை தன்மையை கேள்விக்குறி ஆக்கிவிட்டார்.
மாநில பொலிஸ் அதிகாரங்கள் உடைய இந்திய நாட்டில் இருந்து கொண்டு பொலிஸ் அதிகாரங்களை இலங்கை தமிழர்கள் கேட்க கூடாது என கூற இவர் யார்?
13வது அரசியல் அமைப்பிற்கு அவமதிப்பு ஏற்படகூடிய கருத்துக்களை கூறி அவர் பக்கச் சார்பானவர் என்பதை உறுதிப்படுத்திவிட்டார்.
இலங்கையில் உள்ள சகல மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரம் தேவையில்லையென கூறுவது பொதுவான கருத்தாகலாம்> ஆனால் வடக்கிற்கு குறிப்பாக தமிழ் மக்களின் 97% ஆதரவுடன் அமைந்த வடமாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகளே தீர்மானிக்க வேண்டியதை ஆலோசனை வழங்க வந்து, தமிழர்களின் பிரச்சினையை அறியாத அவ்டால் கௌசல் யார்? இவருக்கு என்ன அருகதை இருக்கின்றது என ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குமரகுருபரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnu0.html
Geen opmerkingen:
Een reactie posten