தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

முடிவுகள் இன்றி முடிந்த இந்திய- இலங்கை மீனவ அதிகாரிகள் கூட்டம்!

சஜித் பிரதி தலைவரானால், ரவி பதவி விலகுவார்!- கொழும்பில் ஊகம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:10.49 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவார் என்று கொழும்பின் அரசியலில் ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பின் பெரும்பாலான ஊடகங்களின் தகவல்படி சஜித் பிரேமதாஸவை பிரதித் தலைவராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர மற்றும் விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
எனினும் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு சஜித்தை பிரதித் தலைவராக்குவதற்கு முனைப்புக்காட்டி வருகிறார்.
இந்தநிலையில் ரவி கருணாநாயக்கவை காட்டிலும் சஜித் பிரேமதாஸவுக்கு பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq5.html

கனடிய நூல் விருதுப் போட்டியில் ஐந்து பேர் பட்டியலில் இலங்கைத் தமிழர் உள்வாங்கப்பட்டுள்ளார்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:32.22 PM GMT ]
இலங்கையில் பிறந்த கனடிய நூல் ஆசிரியர் சியாம் செல்வத்துரை சிட்டி ஒப் டொரன்டோ, டொரன்டோ பொது நூலகம் ஆகியன இணைந்து நடத்திய 2014ம் ஆண்டுக்கான நூல் விருது பட்டியலில் முதல் ஐந்து பேரில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் செல்வத்துரை, டொரன்டோவின் நன்மதிப்பை பெற்றவராக கருதப்படுகிறார்.
டொரன்டோ நூல் விருதின் 40ஆவது நிறைவே தற்போது நிகழ்கிறது.
இந்தநிலையில் தெ ஹங்கி கோஸ்ட் என்ற நாவலுக்காகவே செல்வத்துரை ஐந்து பேர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதன்படி ஐந்து இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கும் 1000 டொலர்கள் பரிசளிக்கப்படவுள்ளன.
வெற்றிபெறும் முதலாமவருக்கு 10ஆயிரம் டொலர்கள் பரிசளிக்கப்படவுள்ளன.
வெற்றி பெறும் முதல் நூல் ஆசிரியர் எதிர்வரும் ஒக்டோபர் 16ம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq6.html
முடிவுகள் இன்றி முடிந்த இந்திய- இலங்கை மீனவ அதிகாரிகள் கூட்டம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:42.03 PM GMT ] [ பி.பி.சி ]
இந்திய, இலங்கை மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் எதிர்கொள்ளும் பிரச்சpனைகள் குறித்து இன்று நடந்த அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் உறுதியான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
மீன்வளத்துறை மற்றும் மீனவர்கள் விவகாரம் தொடர்பான இந்திய- இலங்கை கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது.
இந்திய-இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஏற்கனவே டில்லியில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மீனவர் பிரச்சpனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மீன்பிடி உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
இருநாட்டுக்கும் இடையே அறிவியல் அமைப்புகள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அதன்மூலம் ஆராய்ச்சிகளையும் வளர்ச்சித்திட்டங்களையும் முன்னெடுத்து மீனவர்கள் சுயமாக தொழிலை முன்னெடுக்க உதவுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இருதரப்பும் உடன்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் இந்தியத் தரப்பில் மத்திய கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் மத்திய மற்றும் தமிழக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தரப்பில் மீன்வளத்துறையின் தலைமை நிர்வாகி நிமல் ஹெட்டியாரச்சி தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மீனவர்கள் யாரும் மற்ற நாட்டுச் சிறைகளில் இல்லை, அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்தக் கூட்டம் கொழும்பில் நடைபெறும் என்றும் அதற்கான திகதியை இரண்டு தரப்பினரும் கலந்தாலோசித்து தீர்மானிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எல்லா மீன்பிடி படகுகளையும் பதிவு செய்தல், ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் சான்றிதழ் அளித்தல் உள்ளிட்ட அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக மத்திய கப்பல் அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
முன்னர், 20 மீற்றரை விட நீளமான படகுகளுக்கு இந்தப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
தற்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிய அதிகாரத்தின் மூலம், அனைத்து மீனவர்களும் எல்லா வகையான படகுகளையும் எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்துகொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmq7.html

Geen opmerkingen:

Een reactie posten