இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை நாட்டிற்கு திரும்பி வரச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
தமிழ் நாட்டிலுள்ள 115 முகாம்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள் உள்ளனர்.
'இராணுவம் ஆக்கிரமித்துள்ள இவர்களின் நிலங்களை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு அமுத்தம் கொடுக்க வேண்டுமொன இந்திய அரசாங்கத்தை கேட்டுள்ளோம்' என இந்நிய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவின் உறுப்பினரான மாவை சேனாதிராசா கூறினார்.
யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் சனதொகை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அகதிகளின் மீள்வருகை மிக முக்கியமானதென அவர் கூறினார்.
கடந்த 30 வருடஙடகளாக இந்தியாவிலுள்ள அகதிகளுக்க சேவை செய்து வரும் OFERR அமைப்பின் பொருளாளரான எஸ்.சி.சந்திரஹாஸன் இவ்விடயம் தொடர்ப்பில் இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அகதிகளின் மீள்வருகைக்காக இந்தியாவும் இலங்கையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்ய வேண்டும் என அவர் அதில் வலியுறுத்தியுள்ளார்.
முஸ்லிம்கள் மற்றும் இந்தியவம்சாவளி தமிழர்கள் ஆகிய சிறுபான்மையினருடன் சேர்ந்து இயங்குமாறு மோடி இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டார் என சேனாதிராசா கூறினார்.
தமது இந்திய விஜயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு முன்னதாக தெரிவிக்காததையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோபமடைந்துள்ளார் என த சன்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten