தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

உரம் கலந்த ஊர்காவற்றுறை பனை வெல்லம்: வழக்கு விசாரணை நாளை!



விவசாயப் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பொஸ்பேற் உரத்தினை பயன்படுத்தி பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கு நாளை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மருத்துவ தேவைகள் உட்பட ஏனைய பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பனை வெல்லத்தினை நுகர்வோர், குறித்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதே வேளை சுகாதார திணைக்களம் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள் இவ்வுரப் பாவனை தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவரும் நிலையில் இவ்வழக்கின் தீர்ப்புத் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த 13 ஆம் திகதி ஊர்காவற்றுறை பனை, தென்னை வளக்கூட்டுத் தாபனத்தின் பனை வெல்ல உற்பத்தி நிலையத்தில், மனித பாவனைக்கு உதவாத உரம் கலக்கப்பட்டு பனை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொதுச் சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பனை வெல்ல உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 125 கிலோ கிராம் பொஸ்பேற் உரத்தினையும், அவ்வுரத்தினைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட 114 கிலோ கிராம் பனை வெல்லத்தினையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்தியிருந்தார்.
வழக்கு விசாரணைகளின்போது சங்கத்தின் சார்பில் வாதாடிய சட்டத்தரணி குறித்த செயற்பாடு தொடர்பில் விளக்கமளிக்க செப்டம்பர் முதலாம் திகதி கால அவகாசம் கோரியிருந்தார்.
இந்நிலையில் நாளை வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlq6.html

Geen opmerkingen:

Een reactie posten