[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 11:31.16 PM GMT ]
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவது தொடர்பிலான மனு மீதான விசாரணைகளின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அசியல் அமைப்பினை மீறிச் செயற்பட ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கோ அல்லது வேறும் மேற்கத்தைய அமைப்புக்களுக்கோ அதிகாரம் கிடையாது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொள்ளாது செயற்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான்> பாகிஸ்தான் அகதிக் கோரிக்கையாளர்கள் 240 பேர்> இலங்கைக் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதனை எதிர்த்து அரச சார்ப்பற்ற நிறுவனங்களினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதவான் உபாலி அபேரட்ன> செப்டம்பர் மாதம் 1ம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr6.html
ஹரினுக்கும் நாமலுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 11:57.51 PM GMT ]
பதுளையில் உள்ள வீடொன்றில்; கடந்த 28ம் திகதி இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாசவின் வீட்டிலேயே இந்த இரகசிய சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த இரகசிய சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்திப்பில் என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த லொக்குபண்டார, ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்தில் நிச்சயமாக இணைந்து கொள்வார் என குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்திற்கு ஹரின் எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmr7.html
அளுத்கம வன்முறை! பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கு அச்சுறுத்தல்!- உயிர் பாதுகாப்பிற்காக இங்கிலாந்தில் தஞ்சம்
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 12:04.51 AM GMT ]
அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது அப்பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிராக நடாத்தப்படவிருந்த ஒழுக்காற்று விசாரணையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இவர் இம்மாதம் முதல் பகுதியில் களுத்தறை மாவட்டத்திலிருந்து பொலிஸ் சமூக நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதேவேளை, இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வேறு ஒரு விசாரணைக்கு, ஏற்கனவே, இவரினால் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்பட்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கருத்துத் தெரிவிக்கையில்,
அளுத்கம சம்பவத்துக்கும் தற்பொழுது அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளார்.
உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாடு சென்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரன்
களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் வீ. இந்திரன் உயிர் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக வெளிநாடு சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகள், தனிநபர்கள், பொலிஸ் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் இவ்வாறு தற்காலிகமாக வெளிநாடு சென்றுள்ளதாக பேசப்படுகிறது.
அளுத்கம, தர்கா நகர் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஏற்பட்ட இனவாத வன்முறைகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 பேரை விடுதலை செய்யவில்லை என்பதால், இந்திரன், அரசாங்கத்தின் உயர்மட்ட அரசியல்வாதகிள், பல்வேறு சிங்கள அடிப்படைவாத அமைப்புகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.
இதனையடுத்து இந்திரனை இடமாற்றிய பொலிஸ் திணைக்களம் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களுக்கு பொறுப்பாக வேறு பிரதிப் பொலிஸ் மா அதிபரை நியமித்தது.
தொடர்ந்தும் கொடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் காரணமாக உரிய முறையில் கடமையாற்ற முடியாத காரணத்தினால், இந்திரன் விடுமுறை பெற்று இங்கிலாந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmsy.html
Geen opmerkingen:
Een reactie posten