தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

கோத்தபாயவின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள்!

தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையின் புதிய தலைவராக சட்டத்தரணி தவராசா மீண்டும் தெரிவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 12:49.56 AM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டதுடன்,
உப தலைவர்களாக சிரேஸ்ட சட்டத்தரணி மு.இராஜகுலேந்திராவும், ஏ.தேவராஜாவும் தெரிவாகியதுடன்,
பொதுச் செயலாளராக ஊ. இரத்தினவடிவேலுவும், பொருளாளராக சிவலோகநாதனும் தெரிவுசெய்யப்பட்டதுடன், மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmxy.html
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 01:27.01 AM GMT ]
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசாங்கம் திகதிகளை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் சாசனத்தின் சரத்துக்களுக்கு அமையவும், சிரேஸ்ட சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்பவும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 19ம் திகதியுடன்ää ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
எனவேää நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்பதில் சட்ட சிக்கல்கள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நவம்பர் மாதம் 21ம் திகதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வது குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் சட்ட வல்லுனர்களின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
ஜனவரி மாத நடுப்பகுதியில் புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள காரணத்தினால், தேர்தல்கள் அதற்கு முன்னதாகவே நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx0.html
எதிரிகளால் அல்ல, நண்பர்களாலேயே ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் பாதகம்!- ஆங்கில இதழ்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 02:06.20 AM GMT ]
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரிகளை விட நண்பர்களே பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இந்தியாவுக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்திய பிரதமர் வரவேற்ற விதம் மற்றும் அந்தக் கூட்டமைப்புடன் அவர் நடத்திய நெருக்கமான பேச்சுகள் என்பன தொடர்பிலேயே ஆங்கில இதழ் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்தியா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான வாக்களிப்பின் போது செயற்பட்ட விதம் குறித்து இலங்கை பெருமிதம் அடைந்தது.
இதன் காரணமாக இந்தியாவும் புதிய அரசாங்கமும் கூட தம்முடன் இருப்பதாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நினைத்தது.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தற்போது கொண்டுள்ள நெருக்கம், அயல்நாடுகள் எல்லாமே தம்முடன் உள்ளதாக மஹிந்த ராஜபக்ச நிர்வாகம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு பாதிப்பை கொண்டு வந்துள்ளது.
இதற்கு காரணம் உரிய இராஜதந்திர முனைப்புக்கள் இன்மையாகும்.
பிழையான ஆட்களை ராஜபக்ச அரசாங்கம் சரியான இடங்களில் நியமித்துள்ளமை காரணமாகவே இலங்கை அரசாங்கம் இராஜதந்திர பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
இதன் கட்டமாகவே, பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அமெரிக்காவில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொதுமக்கள் தொடர்பு நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுடன் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளனெ. ஐரோப்பிய நாடுகளுடனும் பிரச்சினைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.
இவையாவும் ஜனாதிபதியின் நண்பர்களால் அரசாங்கத்துக்கு நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய பாதிப்புக்களாகும் என்று ஆங்கில இதழ் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx1.html
கோத்தபாயவின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 02:07.28 AM GMT ]
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தனிநபர் பிரேரணையின் கீழ் இலாபநோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் கம்பனிகள், சமூக அமைப்புக்கள் என்பன கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சட்டம் இன்னும் 6 மாதக்காலத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்கீழ் அரசசார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத போது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதிகளை இழக்கநேரிடும் என்று இலாபநோக்கற்ற நிறுவனங்களின் தேசிய செயலக பணிப்பாளர் சமன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தமது நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் செய்துக்கொடுக்கப்படும் என்றும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் ஏற்கனவே இலங்கை அபிவிருத்தி உதவு நிலையம் என்ற அமைப்பு தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்களை முன்னெடுக்கும் அமைப்புக்களை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நிமல்கா உட்பட்ட பல மனித உரிமை நடவடிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmx2.html

Geen opmerkingen:

Een reactie posten