ஹக்கீம் நானா சொல்லுறத கேட்டால் ஆத்தில குளத்திலதான் விழவேணும்?
ஊவாவில அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கப் போறாராம்..
தேர்தலில வெண்டு எடுக்கிற வோட்டோட போய் பேரம் பேசி அரசாங்கத்தில ஒட்டீண்டு இருக்கிறதுக்கு பேர் அதிர்ச்சி வைத்தியமோ??? போங்க சார்… நல்ல நீதி அமைச்சர் தானுங்கோ நீங்கள்..
ஓ.. அப்ப கிழக்கில தேர்தல் காலத்தில முஸ்லீம் தேசியம் பேசீ அங்க உள்ள பெடி – பெட்டையள உசுப்பேத்தி வெண்டு போட்டு என்னங்கோ செய்தனியல்???? அப்பிடி ஒரு அதிர்ச்சி வைத்தியம் தான் குடுக்கப் போறியலோ?
இந்த நாட்டில இணைஞ்சு போராட வேண்டியவை தமிழர்களும் முஸ்லீம்களும். அதுக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் நல்ல ஒரு சந்தர்ப்பமாய் வந்திச்சு. முதலமைச்சுப் பதவிய நீங்கள் எடுங்கோ எண்டு கூட்டமைப்பும் கேட்டது. அதுக்காக அவை முழுக்க முழுக்க சரியானவை எண்டு சேட்டிவிக்கட் கொடுக்க யாழ்ப்பாணத் தம்பி வரல்ல… ஆனா கிழக்கு தேர்தலில இப்படித்தான் அரசுக்கு எதிராய் முஸ்லீம் தேசியம் பேசிப் பேசி வெண்டு, வோட்டுப் போட்ட அப்பாவி சனங்களுக்கு தானே அதிர்ச்சி வைத்தியம் செஞ்சனீங்க…
நீதியே இல்லதா நாட்டின்ட நீதி அமைச்சரா இருக்கிற சுகத்தை விட விரும்பாம, ஓம்… அழுத்கம சம்பத்தில அரசாங்கத்தை அசௌகரியப்படுத்த விரும்பேல்ல என்று சொல்லியதும் ஒரு வகை அதிர்ச்சி தானுங்கோ ஹக்கீம் சார்…..
ஒரு அசளகரியப்படுத்தாத அமைச்சர்…. எண்டுதான் எங்கட தெருவில இருக்கிற ஒரு முஸ்லீம் தாத்தா சொல்லுறவர். பிறனென்ன? வீடு பத்தி எரியேக்குள்ளயும் நாங்கள் அரசை அசௌகரிளயப்படுத்தேல்ல. ஆனால் அவங்கள் எங்கட மக்கள நல்லா அசௌகரியப்படுத்தலாம் எண்டுற மாதிரித்தானே பேசினவையள். அமைச்சுப் பதவியத் துறந்துபோட்டு என்ன செய்யிறது? எண்டும் கேட்டவர்.
சரி….
இப்ப எதுக்கு இந்த வீராவேசம்?
எப்பிடித்தான் இருந்தாலும் சிங்கள அரசில அமைச்சராய் இருக்கப் போறியள் தானே…; ஊவாவில ஒரு முஸ்லீம வெண்டாலும் அவரைக் கொண்டு போய் ஆளும் சிங்களப் பேரினவாத அரசோட இருத்தத்தானே போறியள்? அதுக்கேன் உந்த வீர ஆவேசம்? இதக் கேட்டால் கடுப்பாகி.. நாங்கள் இந்த அரசாங்கத்தோட கடுமையாய் போராடுறம். முரண்பட்டுக் கொண்டிருக்கிறம். எண்டு பல்லவியை பாடத் தொடங்குவீங்க ஹக்கீம் நானா.
கொஞ்சம் உட்காந்து யோசிச்சு பாருங்க.. ஐ.நாவில நாங்கள் அரசாங்கத்துக்கு துணையிருப்பம் எண்டீங்க… போர்க்குற்றவாளியாக மகிந்தவ மின்சாரக் கதிரையில இருத்த விடாமட்டம் எண்டீங்க. ஊதை மட்டும் சொன்னாலும் பறவாயில்ல ஹக்கீம் சார்… அளுத்கமவுக்கு ஐ.நா போவம். முள்ளிவாய்க்கால் விசயத்தில மகிந்தவ காப்பாற்றுவம் எண்டு னெ;டெல்லாம் சொல்லி எத்தனை அதிர்ச்சி வைத்தியங்களை செங்சனியல்????
அதெல்லாம் சரி.. ஆனால் இன்னும் நீங்கள் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கிறம், லேகியம் குடுக்கிறம் எண்டு சொல்லுறத கேட்டு நாங்கஎல்லாம் ஆத்தில குளத்தில விhழமல் இருக்கிறதே அதிர்ச்சிதான்…
பாத்து ஹக்கீம் நானா…
மகிந்த உங்களுக்கு எப்ப அதிர்ச்சி வைத்தியம குடுக்கப் போறாரோ???
யாழ்ப்பாணத் தம்பி
http://www.jvpnews.com/srilanka/80697.html
வவுனியாவில் புலிக்குட்டி மீட்கப்பட்ட வீட்டில் நடந்தது என்ன?
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து இறந்த நிலையில் புலிக்குட்டி ஒன்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டது. குறித்த வீட்டில் யாருமற்ற நிலையில் கழுத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த புலிக்குட்டியே இறந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
இந்தப் புலிக்குட்டி உணவு இல்லாததாலேயே இறந்துள்ளதாகவும் இது விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் வவுனியா பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த வீட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதன்போது புலிக்குட்டி நடமாடிய தடயங்கள் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏராளமான வெற்று மதுபானப் போத்தல்கள், வெற்று பியர் ரின்கள், வெற்று சிகரட் பெட்டிகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவும் காணப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/80700.html
இலங்கையில் நடிகை பூஜா தலமையில் “தேவை நாடும் மகளிர்“ அமைப்பின் மாபெரும் நடைப் பேரணி…!!
இவ்வமைப்பு தனது சேவைகளை மேற்கொண்டு செல்ல நிதி திரட்ட மாபெரும் நடைப்பேரணியொன்றை நாளை மறுதினம் 30ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு ஒழுங்கு செய்துள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக இடம்பெறும் இந்நிகழ்வில் அனைவரையும் குடும்பமாக வந்து கலந்துக்கொள்ளுமாறு ‘வின்’ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான செய்தியாளர் மாநாட்டில், வின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாவித்திரி விஜேசேகர, கிராண்ட் குழுமத்தின் உப தலைவி லைலா குணசேகர, வின் 2014 நடைபவனியின் தலைவி சொனாலி திசாநாயக்க ஆகியோருடன் பிரபல நடிகை பூஜாவும் கலந்துகொண்டார்.
சி.எச். அன்ட் எவ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகும் நடைபேரணி சுதந்திர அவெனியூ, பௌத்தாலோக மாவத்தை, விஜேராம மாவத்தை, ஹோர்டன் பிளேஸ், நெலும் பொக்குன, சேர் மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தை கூடாகச்சென்று மீண்டும் சி.எச். அன்ட் எவ்.சி. மைதானத்தை வந்தடையும்.
இந்நிகழ்வின் இறுதியில் ஒன்றுகூடல் நிகழ்வொன்றும் இடம்பெறுவதுடன் சிறுவர்களுக்கான சிறு அங்காடிகளும் உணவு விடுதிகளும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ‘வின்’ அமைப்பின் பிரதான குறிக்கோள் மகிழ்ச்சியான குடும்ப சூழல் அமைய பாடுபடுவதாகும். இது வன்முறைகளால் பாதிப்படைந்தவர்களுக்கு சேவையை வழங்கும் ‘வின்’ எந்தவித இலாபமும் கற்றுதராது சேவை செய்யும் அமைப்பாகும்.
இவ்வமைப்பு கொழும்பு தலைமைச் செயலகத்திலும் யாழ்ப்பாணம், அனுராதபுரம், குருணாகல், புத்தளம், கண்டி, மாத்தறை, பதுளை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள கிளைகளிலும் கடந்த பல வருடங்களாக வின் வன்முறையில் பாதிப்படைந்தவர்களுக்கு சேவை செய்கிறது. வன்முறையால் பாதிப்படைந்த பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் சார்பாக நீதி மன்றம் செல்லுதல், வீட்டு வன் முறையால் பாதிப்படைந்தவர்களுக்கு நீதி மன்றம் சென்று பாதுகாப்புக் கட்டளை ((Protection Order) ஒன்றை பெற்றுக்கொடுத்தல், பராமரிப்பு வழக்கு தாக்கல் செய்ய சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்குதல், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாத்தல் சம்பந்தமாக நீதி மன்றத்தில் ஆஜராகுதல் முதலான சேவைகளை இவ்வமைப்பு வழங்குகிறது.
இதைவிட பாதிப்படைந்தவர்களை சமூகசேவகிகள் தொடர்ந்தும் கண்காணித்து, தேவைப்படுமிடத்து வீட்டு விஜயங்களையும் மேற்கொள்வார். பொதுமக்கள், சிவில் சமூக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ‘வின்’ முன்னெடுத்து செயற்படுகின்றது.
அத்துடன் கொழும்பிலும் நாட்டில் இதர பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் ‘வின்’ தனது கிளைகளை அமைத்து வீட்டு வன்முறைகளால் உடல் ரீதியாக பாதிப்படைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உளவளத்துணை சேவையை வழங்கி வைத்தியர்களின் சிபாரிசுக்கேற்ப வலுவூட்டல் சேவையில் ஈடுபடுகிறது.
கொழும்பிலும் நாட்டின் இதர இடங்களிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை சரியான முறையில் பதிவு செய்ய ‘வின்’ பெண்கள் சிறுவர் கரும பீடங்களை அமைத்து தேவை நாடுபவர்களுக்கு உதவி புரிகிறது.
http://www.jvpnews.com/srilanka/80710.html
Geen opmerkingen:
Een reactie posten