[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 01:00.09 AM GMT ]
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையம் விசாரணைக் கமிஷன் அமைத்தது.
ஆனால், ஐ.நா.வின் விசாரணைக் கமிஷனையே இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி தர ராஜபக்ச மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஐ.நா. பொது அவையில் பேசுவதற்கு ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ராஜபக்சவுக்கு முன்னுரிமை கொடுத்து உரையாற்ற அனுமதித்திருப்பதன் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர்களை ஐ.நா.சபை அவமதித்துள்ளது.
எனவே, ஐ.நா.வில் உரையாற்றுவதற்கு ராஜபக்சவை அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUnx4.html
ஜெயலலிதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க மறுத்தார்?
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 02:21.28 AM GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை சந்திப்பதற்காக புது டெல்லிக்கு விஜயம் செய்திருந்த, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் இந்த சந்திப்புக்களின் பின்னர் சென்னைக்கு விஜயம் செய்திருந்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கும் நோக்கிலேயே கூட்டமைப்பினர் சென்னைக்கு சென்றிருந்தனர்.
வடக்கு பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்களுடன் பேசும் நோக்கில் இரகசியமாக கூட்டமைப்பினர் சென்னைக்கு விஜயம் செய்திருந்தனர்.
ஜெயலலிதா சந்திப்பு நடாத்த தவறியதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் தமிழக பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் என சிங்கள ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUnx5.html
Geen opmerkingen:
Een reactie posten