தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

புலனாய்வு செய்மதி கண்காணிப்பில் யாழ்: அலறும் சிங்களம் !

2009ம் ஆண்டுக்கு பின்னர் முள்ளிவாய்க்காலை பற்றி ஆராய்ந்த அமெரிக்க தனியார் செய்மதி அமைப்புகள், தற்போது யாழில் உள்ள உயர் பாதுகாப்பு வலையங்களை ஆராய்ந்து வருகிறது என்ற அதிரும் தகவலை அதிர்வு இணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திய வெளியிட்டது. புலம்பெயர் நாட்டில் இயங்கும் "சமாதானத்திற்கும் நீதிக்குமான இலங்கையின் பிரச்சாரம்" என்னும் அமைப்பு, அமெரிக்காவில் உள்ள தனியார் செய்மதி புலனாய்வு நிறுவனம் ஒன்றிடம் ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார்கள். இதற்கு அமைவாகவே அன் நிறுவனம் யாழில் உள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலையத்தை, செய்மதி ஊடாக ஆராய்ந்து பெரும் தகவல்களை திரட்டி கொடுத்துள்ளது.
யுத்கம் முடிவடைந்த பின்னர் கூட இலங்கை இராணுவம் பல தளங்களை கட்டி வருவதோடு, தனது இராணுவ பலத்தை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என்ற செய்தி இதனூடாக மேலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த சட்டலைட் புகைப்படங்கள் திடீரென வெளியானதால், இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாகவும், அது பாதுகாப்பு மிக்க பகுதி என்று கூறி இலங்கை பாதுகாப்பு அமைச்சு பல சட்டலைட் கம்பெனிகளுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. அப்பகுதியை சட்டலைட் புகைப்படம் எடுக்கவேண்டும் என்றால் , தம்மிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன் நிலையில் தான் குறித்த படங்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக கோட்டபாய ராஜபக்ஷ கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இன் நிறுவனம் வெளியிட்ட படங்களை எடுத்து அவர் மகிந்தருக்கு அனுப்பி இது தொடர்பாக தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதியை அமெரிக்க நிறுவனம் எவ்வாறு வேவுபார்க முடியும் ? என்று அவர் கடிந்துள்ளார். தற்போது ரகசியமாக அமெரிக்க அரசுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடு படவும் அவர் முனைவார் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/876.html

Geen opmerkingen:

Een reactie posten