தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

மகிந்த அமெரிக்கா சென்ற மர்மம் வெளியானது: டட்லி ராஜபக்ஷவைக் காப்பாற்றவா ?

சுற்றுலாவுக்கு வருபவர்களிடம் கள்ள கார்ட் உள்ளதாகவும் ஜாக்கிரதை என எச்சரித்துள்ள பொலிஸ் !

[ Aug 28, 2014 02:07:04 PM | வாசித்தோர் : 1835 ]
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் போலி கடனட்டைகள் இருக்கலாம் என்றும் ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இது பற்றி விழிப்பாக இருக்க வேண்டுமென்றும் பொலிஸ் திணைக்களம் எச்சரித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயண தம்பதியிடம் இருந்து போலி கடனட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
'வைபர்' என்ற கைத்தொலை பேசி செயற்பாடு மூலம் சேகரிக்கப்பட்ட விபரங்களை பாவித்து மலேசியர் ஒருவர் போலி கடனட்டைகளை தயாரித்திருப்பதாக பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
பெறுமதியான பொருட்களை வாங்கவும், இரவுநேர கழியாட்ட விடுதிகளுக்குள் நுழையவும், போலி கடனட்டைகள் இலங்கையில் பாவிக்கப்படுகின்றன. இலங்கையில் கடைகள் மற்றும் கழியாட்ட விடுதிகளில் உள்ள காசாளர்கள் கடனட்டைகளை முறையாக பரிசீலிப்பதில்லை என்று தெரிய வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து சுமார் 50 போலி கடனட்டைகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒரு சில நாட்களில் மட்டும் 50 கள்ள கார்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால், நாடு தழுவிய ரீதியில் பலரிடம் இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/875.html

மகிந்த அமெரிக்கா சென்ற மர்மம் வெளியானது: டட்லி ராஜபக்ஷவைக் காப்பாற்றவா ?

[ Aug 28, 2014 05:23:50 PM | வாசித்தோர் : 1610 ]
undefinedகடந்த 22ம் திகதி மாலை திடீரென அமெரிக்கா கிளம்பியுள்ளார் மகிந்தார். இந்த விடையம் இறுதிநேரம் வரை யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. மகிந்தருக்கும் அவர் மகன் நமால் ராஜபக்ஷவுக்கும் சில பிரச்சனை என்றும், அதனால் அளவுக்கு அதிகமாக மகிந்தர் மது அருந்தியதால் அவர் உடல் நலம் கெட்டுவிட்டது என்றும் சில, டுபாகூர் சிங்கள இணையங்கள் கதை எழுதி உள்ளார்கள். அத்தோடு அவர் கியூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுதப்பட்டது. ஆனால் அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை. அவர் மருத்துவமனையிலும் இல்லை. மகிந்தர் அமெரிக்காவில் உள்ள கியூஸ்டன் மாநிலம் சென்றதற்கு வேறு காரணங்கள் உள்ளது.
மகிந்தரின் சகோதரர்களில் ஒருவரான டட்லி ராஜபக்ஷ அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கடந்த காலங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்து அமெரிக்காவில் சில வியாபார நிறுவனங்களையும் ஆரம்பித்துள்ளார். அமெரிக்கா அதிகாரிகளுக்கு இந்தப் பணம் எவ்வாறு மற்றும் எங்கே இருந்து வந்தது என்பது அக்குவேறு ஆணிவேராகத் தெரியும். மனித உரிமை பிரச்சனை, மற்றும் போர் குற்றச்சாட்டுகள் மகிந்தர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தவேளையில், மகிந்தர் சீனாவுக்கு ஆதரவாக மாறிவரும் நிலை காணப்படுகிறது. கோட்டபாய ராஜபக்ஷவும் தொடர்ந்து இலங்கையில் வசிப்பதால், அமெரிக்காவில் உள்ள டட்லி ராஜபக்ஷவுக்கு அதிகாரிகள் சிலர் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். டட்லி ஊடாகவே மகிந்தரை அணுக முடியும் என்பது அமெரிக்காவுக்கு தெரியாத விடையம் அல்லவே.
அடுத்த மாதம் 20 ம் திகதி ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் கூடவுள்ளது. செப்டெம்பர் மாதம் அமெரிக்கா மீண்டும் ஒரு பிரேரணையைக் கொண்டுவரலாம் என்று எதிர்பார்கப்படும் இன் நிலையில், அமெரிக்காவில் உள்ள காங்கிரஸ் , செனட் சபை உறுப்பினர்களுக்கு தங்கள் நிலைப்பாடு தொடர்பாக, கோட்டபாய அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளார். இது தொடர்பாக சில பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கோட்டபாயவின் அறிக்கை போக மகிந்தரின் அலரி மாளிகையும் அமெரிக்க செனட் சபைக்கு ஒரு அறிக்கையை பிறிவாக அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பாக சில செனட் சபை உறுப்பினர்கள், மற்றும் சக்திவாய்ந்த காங்கிரஸ் சபை உறுப்பினர்களை சந்திக்கவே மகிந்தர் கியூஸ்டன் சென்றுள்ளார்.
இந்த ஏற்பாட்டை டட்லி ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தமிழர்களை ஏமாற்றவும், உண்மை நிலையை மறைக்கவுமே மகிந்தருக்கு புற்றுநோய், அவர் ரத்தத்தில் சிறுநீர் கலக்கிறது என்று எல்லாம் சிங்கள ஊடகங்கள் எழுதுகிறது. அமெரிக்காவை சமாளிக்க மகிந்தர் எடுத்துவரும் முயற்சிகள் தற்போது அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று பலாலி பகுதியை சட்டலைட் கொண்டு போட்டோக்களையும் எடுத்துள்ளது. இதனையும் அமெரிக்கா ஒரு ஆதாரமாக ஐ.நா சபையில் முன் வைக்கலாம். ஓபாமாவின் அமைச்சரவையில் உள்ள, ஒரு பலம் மிக்க அதிகாரி ஒருவரால் தான் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்படுகிறது. அந்த அதிகாரிக்கு மிகவும் நெருக்கமான செனட்டர் ஒருவரையே மகிந்தர் ஜியூஸ்டனில் சந்திக்கவும் உள்ளார். இது தமிழர்களை பொறுத்தவரை பெரும் ஆபத்தான் விடையம் ஆகும்.
undefined
http://www.athirvu.com/newsdetail/879.html

Geen opmerkingen:

Een reactie posten