தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 augustus 2014

சஜித் பிரேமதாசவை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்- ஹரின் பெர்ணான்டோ!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள வகுப்புப் பகிஸ்கரிப்பு
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 11:05.46 AM GMT ]
பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீட மாணவர்களும் இன்று அடையாள வகுப்புப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வகுப்புப் பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதாக மாணவர் சங்கத் தலைவர் லசந்த அருண சாந்த தெரிவித்துள்ளார்.
முகாமைத்துவ பீடத்தை மீள அமைக்குமாறு கோரி மாணவர்கள் சிலர் கடந்த 21ஆம் திகதி தொடக்கம் கலஹா சந்தியில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கலஹா சந்தியில் அநாவசிய கட்டுமானம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை எதிர்வரும் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் பல்கலைக்கழகத்திற்குள் குழப்ப நிலை தோன்றியுள்ளதென பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் குறித்த தகவல்களை பல்கலைக்கழகத்தில் உள்ள சிலரே பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இவ்வாறு மாணவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டால் வகுப்புப் பகிஸ்கரிப்பு தீவிரமடையும் என பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லசந்த அருண சாந்த எச்சரித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnvz.html
ஜனாதிபதியின் சுகவீனம் ஊவா மாகாணசபை தேர்தல் நாடகமா?
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 11:16.55 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது சுகவீனம் காரணமாக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பது தெரிந்த விடயமே.
எனினும் அவர் கலந்துக்கொள்ள மிக விரிவான ஏற்பாடுகளை செய்து வரும் ஆளும் தரப்பினர் வரும் 31ம் திகதி பதுளை வின்சென்ட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் ஆயிரம் பேருக்கு மோட்டார் சைக்கிள் வழங்குதல், மற்றும் பல பொது வேலை திட்டங்களை ஆரம்பித்தல் போன்ற வேலைகள் மிக விருவிருப்பாக நடைபெற்று வருகின்றதும் குறிப்பிடதக்கது.
எனினும் அரசுக்கு தற்போது மக்கள் ஆதரவு குறைந்து வரும் இவ்வேளையில் அவருக்கு திடீர் சுகவீனம் காரணமாக அவரின் சகோதரர் டட்லி ராஜபக்சவின் ஏற்பாட்டில் அமெரிக்காவில் சிகிச்சை நடைபெறுகின்றது.
எனினும், சிங்கள மக்களிடையே அனுதாப வாக்குகளை ஊவா மாகாணத்தில் பெறும் நோக்குடன் இவர் அங்கு சென்றாரா? அல்லது உண்மையான சுகவீனமா? என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றியுள்ளது, சுகவீனம் என்றால் இவரின் அமைச்சுக்களை கவனிக்க தற்காலிகமான ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும் அரசியல் அமைப்பின் பிரகாரம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியதும் அவசியம் இருப்பினும் இதுவரை இவ்வாறான எந்த அறிவித்தலும் இல்லை ஆனால் ஊவா மாகாண சபை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மாத்திரம் அவரின் சகோதரர் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது.
ஆகவே, இது ஊவா மாகாண தேர்தலில் சிங்கள மக்களிடையே ஓர் அனுதாப அலையை ஏற்படுத்தி வாக்குகளை பெற செய்யும் நாடகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் இது போன்ற அனுதாப வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பெற்றதும் குறிப்பிடதக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnv0.html
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு பிணை
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 11:31.22 AM GMT ]
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகரை திட்டி அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடரப்பட்ட வழக்கிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து 25 ஆயிரம் ரூபா பிணையில் வாஸ் குணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வர்த்தக ஷியாம் கொலை வழக்கு உட்பட மேலும் இரண்டு வழக்குகளில் வாஸ் குணவர்தன தொடர்ந்தும் விளக்கமறியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnv1.html
சஜித் பிரேமதாசவை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்- ஹரின் பெர்ணான்டோ
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 11:50.45 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இணைந்து கொள்ள வேண்டாம் என அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சஜித் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து, கட்சியின் தலைமைத்துவச் சபை அல்லது கட்சியின் தலைவருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் எதையாவது பேசினால், அதனை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தல் முடியும் வரை ஊடகங்கள் மூலம் தோலுரிக்கும் என ஹரின் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUnv2.html

Geen opmerkingen:

Een reactie posten