சுகாதார சேவையில் மோதல் மற்றும் நெருக்கடி ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணம் என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தாதியர், மருத்துவர்களிடையே பிரச்சினைகளும், மோதல்களும் தோன்றியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவித்து வந்த அரசாங்கம் தற்போது ஏனைய துறைகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்து அரசியல் லாபம் தேட முனைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டார்.
மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்
மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்வதால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.ஃ
பதவி உயர்வுகள் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26 ஆம் திகதி தொடக்கம் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக மருத்துவமனை பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்துப்பொருள் விநியோகம் மற்றும் ரசாயன ஆய்வு பரிசோதனைகள் என்பன இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் 12 மணி தொடக்கம் அத்தியாவசிய மருத்துவ சேவைகளில் இருந்து மருத்துவ தொழிநுட்பவியலாளர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp4.html
Geen opmerkingen:
Een reactie posten