யாழ்.மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் படையினர் மட்டுமே நிலைகொண்டிருக்கின்றனர். ஆனால் அரசியலுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக இராணுவத்தினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவந்தனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குற்றச்சாட்டின் உண்மைத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் நிறைவடைந்த நிலையில் பருத்துறை வீதியிலிருந்து பெருமளவு படையினர் வேட்டிகளுடன் மேலங்கி இல்லாமல் அர்ச்சனை பொருட்கள் மற்றும் காவடி ஆகியவற்றுடன் ஆலயத்திற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு சிறப்பு பூஜை ஒழுங்குகளும் செய்யப்பட்டன.
இது இவ்வாறிருக்க இந்த பூஜை வழிபாடுகளில் சுமார் 15ஆயிரம் வரையிலான படையினர் கலந்து கொண்டிருந்ததாக யாழ் மாவட்ட படை கட்டளை தலமையகத்தின் ஊடகங்களுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் அரசாங்க ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருக்கின்றார். மேலும் இன்றைய தினம் சுமார் இரண்டாயிரம் படையினர் காவடி எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பூஜை வழிபாடுகளில் பெருமளவு படையினர் கலந்துகொண்டிருக்க யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள படைமுகாம்களில் முன்னர் இருந்ததைப்போன்று படையினர் இருந்தனர். எனவே யாழ்.மாவட்டத்தில் 15 ஆயிரம் படையினர் மட்டுமே உள்ளனர் என்ற படையினரின் விதந்துரை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த பூஜை வழிபாடுகளில் 15 ஆயிரம் படையினர் கலந்து கொண்டிருந்தனர். என்றால் படையினரின் கணக்குப்படி மாவட்டத்தின் சகல முகாம்களும் வெறுமையாக காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லை.
எனவே தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் கூறி வருவதைப்போன்று யாழ்.மாவட்டத்தில் 40 ஆயிரம் வரையான படையினர் நிலைகொண்டுள்ளனர். என்ற தரவு உன்மையாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRcKUns1.html
Geen opmerkingen:
Een reactie posten