தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

தாம் கைப்பற்றிய விமானப்படை தளத்தில் இருந்த 250 வீரர்களை ஒரே நடையில் கொலைசெய்த அமைப்பு !


கடந்த சில தினங்களுக்கு முன்னர், சிரியாவின் எல்லையில் உள்ள விமானப்படை முகாம் ஒன்றை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தார்கள் என்ற செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தியே இத்தீவிரவாதிகள் இம் முகாமை கைப்பற்றி இருந்தார்கள். இங்கே பலர் கொல்லப்பட்ட நிலையில், அனைத்து படையினரையும் சரணடையுமாறு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் கோரினார்கள். சரணடைந்தால் தாம் எதனையும் செயப்போவது இல்லை என்று அவர்கள் வாக்குறுதியையும் வழங்கினார்கள். இதனை நம்பி சுமார் 250 சிரிய படை வீரர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினரிடம் சரணடைந்தார்கள்.
இன் நிலையில் அவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து, ஆடைகளை களைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களை சித்திரவதை செய்துள்ளார்கள். இதில் பெண்களும் அடங்குவார்கள். பின்னர் அனைவரையும் அழைத்துச் சென்று ஒரு வெட்டவெளியில் வைத்து வரிசையாக சுட்டுக்கொன்றுள்ளார்கள். இந்த வீடியோவை அவர்கள் இன்ரர் நெட்டில் ஏற்றியும் உள்ளார்கள். இதனால் சிரிய அரசு கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சிரியா உதவி வந்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதற்காகவே சிரியா உதவி வந்தது.
ஆனால் தற்போது அவர்கள் சிரியாவுக்கு எதிராகவும் தமது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் இங்கே பார்கும் வீடியோ படு பயங்கரமான காட்சிகளைக் கொண்டது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்கவேண்டாம்.
http://www.athirvu.com/newsdetail/882.html

Geen opmerkingen:

Een reactie posten