தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சிக்கின்றார்களா?

நீங்கள் தான் முதலமைச்சர் என்று நாமல் வாழ்த்தினார்!- ஹரின் பெர்ணான்டோ
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 09:12.53 AM GMT ]
ஊவா மாகாணத்தின் எதிர்கால முதலமைச்சர் நீங்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தன்னை வாழ்த்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவும் நாமல் ராஜபக்சவும் இரகசியமாக சந்தித்து பேசியதாகவும் அது ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைவதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தை என சிங்கள தினசரி ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாமலுக்கும் தனக்கும் இடையிலான சந்திப்பு திடீரென ஏற்பட்ட சந்திப்பு எனவும் அது இரகசியமான பேச்சுவார்த்தை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திடீரென நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷாமிக்க புத்ததாசவின் வீட்டில் தான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தித்ததாகவும் அவருடன் எந்த இரகசிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை எனவும் ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
நாங்கள் இருவரும் எந்த இரகசியமான பேச்சுவார்த்தைகளையும் நடத்தவில்லை.
நானும் நாமலும் ஒன்றாக றகர் விளையாடியுள்ளோம். நாடாளுமன்றத்திலும் நாங்கள் சிறந்த நண்பர்கள்.
நான் ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பவன் என்றாலும் எங்கள் நட்புக்கு எந்த குந்தகமும் ஏற்படவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைவதற்கு பதிலாக அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாம்.
ஊவா மாகாண முதலமைச்சராக தெரிவானாலும் தெரிவாகாவிட்டாலும் எப்போதும் நான் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே இருப்பேன் என்றும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp2.html
நவிபிள்ளை ஓய்வு! வருத்தம் தெரிவித்து இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் கடிதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 10:05.04 AM GMT ]
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை இன்று (31ஆம் தேதி) ஓய்வு பெறுகிறார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் நவநீதம்பிள்ளை கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம் தொடர்பாக, அந்நாடு மீது சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிடக் காரணமாக இருந்தார்.
மேலும், இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது நடந்த போர்க்குற்றங்களைப் குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இலங்கை சென்று ஒருவார காலம் நவநீதம்பிள்ளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நவநீதம்பிள்ளை வகித்து வந்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து இன்று (31ஆம் தேதி) ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, அவர் சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்படும் என நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை ஓய்வு பெறுவதையடுத்து, இப்பொறுப்பிற்கு, ஏற்கனவே ஐ.நா. சார்பில் தேர்வாகியுள்ள, ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை (செப்டம்பர் 1ஆம் தேதி) முறைப்படி பொறுப்பேற்கிறார். சையத் அல் ஹூசைன் ஐ.நா.வுக்கான ஜோர்டன் நாட்டு தூதராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே, நவநீதம்பிள்ளை ஓய்வுபெறுவதற்கு வருத்தம் தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த பல அரசு சாரா நிறுவனங்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp4.html
ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சிக்கின்றார்களா?
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 11:16.46 AM GMT ]
ஆறு இலங்கையரை, ஆந்திராவிலுள்ள பிரகாசம் கடற்கரை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற நால்வர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 5 வருடங்களாக பதுங்கியிருந்த தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் புலனாய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின்னர் வலுவிழந்து போன தமிழீழ விடுதலை புலிகள், அவுஸ்திரேலியாவில் மீண்டும் அணிதிரள முயற்சிக்கின்றார்களா? இந்த மனித கடத்தல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வாளர்கள் வந்தனர்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடிவரவாளர்கள் அநேகமாக முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் அதிகாரம் மிகுதியாகக் காணப்பட்ட முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த 24-28 வயதானவர்களாக காணப்பட்டனர்.
நல்ல திடகாத்திரமான இவர்கள் வேலையற்றவர்களாக இருந்தனர். இதனால் இவர்கள் விரக்தியடைந்திருந்தனர்.
இந்த நிலையில் இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சேர்த்துக் கொள்வது வசதியாக உள்ளது. இவர்கள் வேலை தேடி மட்டும் அவுஸ்திரேலியா செல்லவில்லை.
இதனை நியாயப்படுத்தும் வகையிலேயே பிரகாசம் கரை வழியாக அவுஸ்திரேலியாக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஒருவர் நுழைந்துள்ளார்.
நாம் இலங்கையில் இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்படுகின்றோம். எமக்கு அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைப்பதில்லை. நாம் பெருமளவு லஞ்சம் கொடுத்து உப ஒப்பந்தங்களை எடுத்து செல்வதால் சொற்பளவான இலாபமே கிடைக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் செய்மதி தொலைபேசியை பயன்படுத்தி ஆழ்கடலிலுள்ள தமது ஆட்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அயர்லாந்து, ஐக்கிய இராஜ்ஜியம், கனடா போன்ற நாடுகளுக்கும் இலங்கை தமிழர்களை கடத்துகின்றனர்.
தமிழ் நாட்டிலும் புதுச்சேரியிலும் நெருக்குவாரம் அதிகரித்த பின்னர் பிரகாசம் கடற்கரையை இவர்கள் பயன்படுத்துவதாக தெரிகின்றது. 60 பேர் வரையில் பிரகாசம் கடற்கரையை பயன்படுத்தி தாம் விரும்பிய இடங்களுக்கு சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையில் பிறந்த ஆட்கடத்தல் மன்னனான சண்முகலிங்கத்தை போதைப்பொருள் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தினால் முழுவிபரமும் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlp5.html

Geen opmerkingen:

Een reactie posten