[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 11:34.54 PM GMT ]
மூதூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பொலிசார் மதுபான சோதனை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டதுடன், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகின்றது.
இதனை அப்பகுதியில் மறைந்திருந்த ஒரு வாலிபர் தனது செல்போன் கமெரா மூலம் ஒளிப்பதிவு செய்து இணையத்தில் தரவேற்றியமை காரணமாக பொலிசார் மிகுந்த சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை நேரத்தில் மீண்டும் மூதூர் கிராமத்திற்குள் புகுந்த பொலிசார், செல்போனில் ஒளிப்பதிவு செய்த வாலிபரைக் கண்டறியும் நோக்கில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
இதன்போது ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், குடிபோதையில் இருந்த பொலிசார் தகாத வார்த்தைகளால் பொதுமக்களை அர்ச்சித்துள்ளனர்.
இவ்வாறாக இவர்கள் அடாவடியாக புகுந்து அட்டகாசம் மேற்கொண்ட வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கண்காணிப்பு கமராவினுள் இம்முறையும் பொலிசாரின் அடாவடி நடவடிக்கைகள் தெளிவாக ஒளிப்பதிவாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்து சனிக்கிழமை சிங்கள தொலைக்காட்சியான சிரச தொலைக்காட்சி விசேட செய்தித் தொகுப்பாக வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து மூதூரில் பொலிசார் மற்றும் பொதுமக்கள் இடையிலான முறுகல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இதன் காரணமாக மூதூர் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmw3.html
புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும் என்கிறார் சங்கரியார்!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 11:58.40 PM GMT ]
2004ம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும்.
அதில் இக்கூட்டமைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக்கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்டமைப்பினரே.
புலிகள் இருந்தபோது ஒரு கதையும், இப்போது அவர்கள் இல்லையென்றதும் மற்றொரு கதையும் பேசக் கூடாது. புலிகள் செய்த பல குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களுக்கும் நன்கு தெரியும்.
அதனால் இவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள். குறைந்தது புலிகளைப் பற்றிய வெளிவராத உண்மைகளையாவது இவர்களிடமிருந்து கேட்டறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
2004ம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் பாரதூரமான விடயம். இலங்கை அரசாங்கம் தடை செய்த ஒரு அமைப்பை அவர்கள் தமதும், தமிழ் மக்களதும் பிரதிநிதிகள் என வர்ணித்துள்ளனர்.
தேர்தல் விஞ்ஞாபனம் என்பது வெறும் துண்டுப் பிரசுரம் அல்ல. அது ஒரு கட்சியின் உத்தியோகபூர்வ ஆவணம். எனவே இதற்கு தமிழ்க் கூட்டமைப்பினர் பதில் கூறியே ஆக வேண்டும்.
இன்று என்னை விமர்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பலர் அன்று புலிகளை கடுமையாக விமர்சித்தவர்களே. பதவி ஆசையால் குத்துக்கரணம் போட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பலரதும் இரட்டை வேடம் எனக்குத் தெரியும். விரைவில் அவற்றை முழுமையாக அம்பலப்படுத்துவேன் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmw4.html
Geen opmerkingen:
Een reactie posten