தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

இம்மாத இறுதிக்குள் இலங்கைவசமுள்ள படகுகளை மீட்பேன்! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை திறந்துவைத்தார் அமைச்சர் பஸில்!(படம் இணைப்பு)
இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ இன்று நண்பகல் 11.30 மணிக்கு திறந்துவைத்தார். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அதிகார சபையின் ஏற்பாட்டில் அச்சுவேலியில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட இந்தக் கைத்தொழில் பேட்டையில் 22 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே.சிங்கா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி , பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா உட்பட மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் கைத்தொழில் பேட்டையின் மீள் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசு சிறிய நன்கொடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 225 மில்லியன் ரூபா நிதி உதவியையும் இலங்கை அரசு 50 மில்லியன் ரூபா நிதியுதவியையும் வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
27 Aug 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409125612&archive=&start_from=&ucat=1&
ஊவா பாதுகாப்பை அதிகரியுங்கள்! பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு விடுத்தார் தேர்தல் ஆணையாளர்
மொனறாகல மாவட்டத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு உத்தரவிட்டுள்ளார். ஊவா மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மொனறாகல மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கூறப்படுகின்றது.

இதனாலேயே மொனறாகலவின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பதல்கும்புரா என்ற இடத்தில் ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான 'பவ்ரல்' ஊவா மாகாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளது.
27 Aug 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409125813&archive=&start_from=&ucat=1&
கடலில் முழ்கியது படகு: அதில் பயணித்த நால்வர் மாயம்! (படம் இணைப்பு)
மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு பழுதடைந்து கடலில் மூழ்கியுள்ளது. அதில் பயணித்த நான்கு மீனவர்கள் காணாமற்போயுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. மண்டபம் கோயில்வாடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துவிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கரை திரும்பும் போது ஜான் கென்னடி என்பவரின் படகு கடல் சீற்றம் காரணமாக பழுதாகி கடலில் முழ்கியது. இதனையடுத்து படகு உரிமையாளர் ஜான் கென்னடி, டேனியல், வில்சன், எஸ்ரோ, உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமற்போயினர்.

மாயமான மீனவர்களை தேடிக்கண்டு பிடித்து தரும்படி இந்திய கடலோரகாவல் படை மற்றும் கடலோரகாவல் பொலிஸ் அதிகாரிகளுக்கு உறவினர்களும் மீனவ அமைப்புகளும் மனு கொடுத்துள்ளனர்.
27 Aug 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409125970&archive=&start_from=&ucat=1&
இம்மாத இறுதிக்குள் இலங்கைவசமுள்ள படகுகளை மீட்பேன்! மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 62 படகுளை இம்மாத இறுதிக்குள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 94 பேர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட மீனவர்களில் சிலர், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதன்பின் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது ''இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். வெளிநாடு சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடு திரும்பியதும் இதுகுறித்து தான் நேரில் சந்தித்து பேசுவார் என்று எமக்கு உறுதியளித்துள்ளார்.

அத்துடன் இம்மாத இறுதிக்குள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் 62 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பார் என்றும் அவர் எம்மிடம் உறுதி அளித்தார்"- என்றனர். இதேவேளை, இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து நாளைமறுதினம் டில்லியில் நடைபெறவுள்ள பேச்சில் தமிழகப் பிரதிநிதிகளும் பங்குபற்றுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளைமறுதினம் நடைபெறும் உயர்நிலைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகளும், இரண்டு வல்லுநர்களும் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் தமிழக மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழுவும் இடம்பெறும் என்று தெரிகிறது.
27 Aug 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1409126218&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten