[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 07:32.20 AM GMT ]
வாரியபொல தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரியபொல பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து நபர் ஒருவரை குறித்த பெண் சரமரியாக அறைந்திருந்தார்.
திலினி அமல்கா என்ற 21 வயதான யுவதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியிருந்தார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் குறித்த யுவதியை பொலிஸார் கைது செய்து பிணையில் விடுதலை செய்திருந்தனர்.
தம்மை பொலிஸார் கைது செய்தமைக்கு எதிராக குறித்த யுவதி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த யுவதியின் சட்டத்தரணி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கைதான யுவதி சரீர பிணையில் விடுதலை!
குருநாகல் வாரியபொலவில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட யுவதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இவர் இன்று காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
21வயதான இந்த யுவதி, அண்மையில் வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தம்மை இழிவாக பேசியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரை தாக்கினார்.
இது சமூக இணையத்தளங்களில் காணொளி காட்சியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதன்காரணமாக தம்மால் பொதுமக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி குறித்த இளைஞர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்தே யுவதி கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இளைஞரை தாக்கிய யுவதி கைது
குருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp1.html
இந்தியத் தூதுவர் சிங்ஹாவின் அச்சுவேலி உரை ஆச்சரியமானது!
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 09:47.47 AM GMT ]
நேற்று முன்தினம் புதன்கிழமை அச்சுவேலியில் கைத்தொழில் பேட்டையைத் திறந்து வைத்து உரையாற்றிய சிங்ஹா மேற்கண்டவாறு கூறியது பொருத்தமுடையதா? என்ற கேள்வி ஏற்படுவது நியாயமானதே.
வடக்கு மாகாணசபையும் மத்திய அரசும் இணைந்து செயற்பட வேண்டுமெனக் கூறுவதற்குள் வடக்கு மாகாணசபை அதிகாரமுள்ள அமைப்பாக அல்லது மத்திய அரசு திட்டங்களை தடை செய்யக்கூடிய பலம் பொருந்திய சபையாக இருப்பதுபோல சிங்காவின் உரை அமைந்துள்ளது.
வடக்கு மாகாணசபையால் எதுவும் செய்ய முடியவில்லை. முழு அதிகாரத்தையும் மத்திய அரசு தன்வசம் வைத்துள்ளது.
வடக்கு மாகாணசபை எந்தத் திட்டத்தை முன்னெடுத்தாலும் அதில் ஆளுநரின் தலையீடு உள்ளது.
இதனால் எங்களால் எதுவும் செய்யமுடியாது உள்ளதென வடக்கு மாகாணசபையின் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அடிக்கடி கூறிவருகின்றார்.
வடக்கு மாகாண அரசு பதவியேற்ற காலத்திலிருந்து தீர்மானங்களை நிறைவேற்றி வருவதைத் தவிர வேறு எதனையும் அந்தச் சபையால் செய்யமுடியவில்லை.
ஆளுநரை மாற்றித் தாருங்கள் என்று முதல்வர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்விடம் கேட்டிருந்தார். காலம் வரும் போது உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதியும் கூறியிருந்தார்.
ஆனால், ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த போது கூட, முதலமைச்சரின் கோரிக்கை நிறைவேற்றப்படாத அளவில் ஆளுநரின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.
வடக்கு மாகாணசபை சாதித்தது என்னவென்று யாரேனும் கேட்டால் ஆளுநரை மாற்றினோம் என்று சொல்லலாம் என்றால் அதற்குக் கூட, மத்திய அரசும் ஜனாதிபதியும் இடந்தரவில்லை.
ஆளுநரை மாற்ற முடியாவிட்டாலும் பரவாயில்லை; வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் மீதாவது அதிகாரத்தைச் செலுத்தலாம் என்று வடக்கின் முதல்வருக்கு ஆலோசகர்கள் கருத்துரைக்க, அதனை நம்பிய முதல்வர் பிரதம செயலாளரின் லீவு விடயங்களில் தலையிட்டார்.
அட! பிரதம செயலாளரின் லீவு விடயங்களிலும் தலையிடும் அதிகாரம் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கிடையாது என்பதை உயர் நீதிமன்றம் கூறித் தெரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆக, ஆளுநரை மாற்ற முடியவில்லை; நியதிச் சட்டங்களை நமக்கேற்றாப் போல் உருவாக்க முடியவில்லை என்பதாக வடக்கு மாகாண அரசின் போக்குள்ளது.
இந்நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர்; மத்திய அரசும் வடக்கு மாகாண அரசும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கேட்பது போல சிங்ஹாவின் உரை இருப்பது ஆச்சரியமானதுதான்.
வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உரையாற்ற வேண்டிய சிங்கா, அச்சுவேலியில் தப்புத்தாளமாக சிங்...கா போட்டது எங்கள் நிலைமை இன்னமும் புரியப்படாத விடயமாக இருக்கிறதா? என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRdKUmp3.html
Geen opmerkingen:
Een reactie posten